OUR CLIENTS
70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி
70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி Posted on 12-Jul-2019 70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி

வாஷிங்டன், ஜூலை 12-
அமெரிக்காவைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கட்டுடற்கட்டு போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று அசாத்திய சாதனை புரிந்துள்ளார். 

மிசவுரி பகுதியைச் சேர்ந்தவர் ரெபேக்கா வூடி. 70 வயது நிரம்பிய ரெபேக்காவுக்கு தனது உடலை ஆண்கள் போல கட்டுடலாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதையடுத்து கடந்த 1982ம் ஆண்டு உடற்பயிற்சிக் கூடத்தில் சேர்ந்த அவர், ஆண்களுக்கு நிகராக அனைத்து உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டார். தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப் படி உணவு பழக்கத்தை மாற்றியவர் சொந்தமாக உடற்பயிற்சி கூடம் தொடங்கி பெண்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் மிசவுரியில் நடந்த கட்டுடற்கட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று பெண்கள் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார் ரெபேக்கா.

Label