OUR CLIENTS
சீதை வேடத்தில் நயன்தாரா?
சீதை வேடத்தில் நயன்தாரா? Posted on 12-Jul-2019 சீதை வேடத்தில் நயன்தாரா?

ராமாயண காவியத்தை ஏற்கனவே பலர் படமாக்கி உள்ளனர். தற்போது இன்னொரு ராமாயண படத்தை ‘3டி’யில் எடுக்கின்றனர். இந்த படத்தை இந்தியில் தங்கல் படத்தை இயக்கி பிரபலமான நிதிஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ படத்தை இயக்கிய ரவி உத்யவார் ஆகியோர் இணைந்து டைரக்டு செய்கிறார்கள். பிரபல தெலுங்கு பட அதிபர் அல்லு அரவிந்த் தயாரிக்கிறார்.ரூ.1,500 கோடி செலவில் மூன்று பாகங்களாக தயாராகிறது. ஒவ்வொரு பாகத்துக்கும் தலா ரூ.500 கோடி செலவிடுகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகிறது. ராமாயணத்தை படமாக்குவது குறித்து டைரக்டர்கள் நிதிஷ் திவாரி, ரவி உத்யவார் ஆகியோர் கூறியதாவது.

ராமாயணம் மிக சிறந்த காவியம் மட்டுமின்றி நமது கலாசாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்த படத்தை மிகவும் பொறுப்போடு எடுக்கும் அவசியம் இருக்கிறது. எனவே இந்த படத்தை கண்கொள்ளா காட்சியாக திரையில் காட்ட இருக்கி றோம்.” இவ்வாறு அவர்கள் கூறினர். இதன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. முதல் பாகம் 2021-ல் வெளியாகிறது.

Label