OUR CLIENTS
கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்இந்திய கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜா
கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்இந்திய கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜா Posted on 12-Jul-2019 கடைசி மூச்சு இருக்கும் வரை  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்இந்திய கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜா

புதுடெல்லி, ஜூலை 12-
இந்திய கிரிகெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- நியூசிலாந்து ஆகிய அணிகள் முதல் அரையிறுதிச் சுற்றில் மோதின. இதில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் 6 விக்கெட்டுக்கு 92 ரன்கள் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி இருந்தபோது, களத்தில் ரவீந்திர ஜடேஜா இறங்கினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா, 59 பந்துகளில் 77 ரன்கள் வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

ஜடேஜாவும் டோனியும் ஆட்டத்தை இழக்காமல் கடைசி வரை கொண்டுவந்தனர். கடுமையாக போராடியும் இந்தியா தோற்றது. இருப்பினும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து ரவீந்திர ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஒவ்வொரு முறை கீழே விழும்போதும், மீண்டும் எழ விளையாட்டு எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது. எனக்கு உறுதுணையாக இருக்கும் ஒவ்வொரு ரசிகருக்கும் என் நன்றி மட்டுமே போதுமானது அல்ல. 

உங்களின் ஆதரவிற்கு நன்றி. தொடர்ந்து உத்வேகம் கொடுங்கள். என் கடைசி மூச்சு இருக்கும் வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன், என பதிவிட்டுள்ளார். 

Label