OUR CLIENTS
புல்லட் ரயில் திட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை- பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கருத்து
புல்லட் ரயில் திட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை- பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கருத்து Posted on 12-Jul-2019 புல்லட் ரயில் திட்டம்  இந்தியாவில் சாத்தியம் இல்லை- பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி, ஜூலை 12-
புல்லட் ரயில் திட்டம் இந்தியாவில் சாத்தியம் இல்லை என பாராளு மன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

மக்களவையில் நேற்று ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுதிப் பந்தோபாத்யாய் பேசியதாவது.
 
புல்லட் ரயில் திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்துவது சாத்தியம் இல்லை. அப்படியே செயல் படுத்தினாலும் அந்த ரயில்களை அதிவேக ரயில்கள் என்று அழைக் கலாமே தவிர, புல்லட் ரயில்கள் என அழைக்க முடியாது. இந்த புல்லட் ரயில் திட்டம் என்பது புரளியான மற்றும் தவறான வாக்குறுதி. புல்லட் ரெயில்கள் ஒரு தனி அமைப்பைக் கொண்டு ள்ளன.

பயணிகளின் பாது காப்பை கருத்தில் கொண்டு, 100 ஆண்டுகள் பழமையான பாலங்களை அரசு ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும். ரயில்வேயில் கேங்மேன், டிரைவர்கள் வேலை நிறைய காலியாக உள்ளன. கிட்டத்தட்ட 2 லட்சம் கேங்மேன் வேலை காலியாக உள்ளன. டிரைவர் களுக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. எப்போது இந்த காலிப் பணியிடங்களை நிரப்பப் போகிறீர்கள்? 

ரயில்வேயில் உணவுக் கூடம், தூய்மை, உணவு பாதுகாப்பு மற்றும் தரத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பணி வழங்குவதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ரயில் பயணம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், பயத்துடன் இருக்கக் கூடாது. ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் ஒருங்கிணைத்திருப்பது, ரயில்வே துறைக்கு உதவ வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Label