OUR CLIENTS
வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது எம்.பி. சசிகலா புஷ்பா மனு
வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது எம்.பி. சசிகலா புஷ்பா மனு Posted on 12-Jul-2019 வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது எம்.பி. சசிகலா புஷ்பா மனு

புதுடெல்லி, ஜூலை 12-
பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கக்கூடாது என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம் எம்.பி. சசிகலா புஷ்பா மனு அளித்துள்ளார்.

2009-ல் திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி, வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர்  ஆவதில் சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டது. ஆனால் வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டதால் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்படலாம்.. 23 ஆண்டுகளுக்குப் பின் வைகோ மாநிலங்களவைக்குள் நுழைகிறார். இந்நிலையில் சசிகலா புஷ்பா எம்.பி. மாநிலங்களவை  தலைவரான குடியரசு துணைத் தலைவர்  வெங்கய்யா நாயுடுவிடம் ஒரு மனு அளித்துள்ளார்.  அதில், தேசத்துரோக வழக்கில் தண்டனை பெற்ற வைகோவுக்கு ராஜ்யசபா எம்.பி.யாக பதவி பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என வலியுறுத்தி யுள்ளார். மேலும் பிரதமர் மோடியை தமிழர் விரோதியாக தொடர்ந்து சித்தரித்து வருகிறார் வைகோ என்றும் சசிகலா புஷ்பா அதில் குற்றம் சாட்டியுள்ளார்.

Label