OUR CLIENTS
அரசு சட்டக் கல்லூரியில் மரம் நடும் விழா!
அரசு சட்டக் கல்லூரியில் மரம் நடும் விழா! Posted on 12-Jul-2019 அரசு சட்டக் கல்லூரியில் மரம் நடும் விழா!

காட்பாடி, ஜூலை 12-
காட்பாடியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் மரம் நடும் விழாவை நடத்தினர். மரம் நடும் விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜே.விஜயலக்ஷ்மி தலைமை வகித்தார். 

மூன்றாம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் சார்பாக 2019 -2020ம் கல்வி ஆண்டு தொடங்கியதை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் மாணவர் மற்றும் ஆசிரியர் ஒன்றிணைந்து 50 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. மேலும் இவ்விழா இனிவரும் அனைத்து கல்வி ஆண்டுகளிலும் நடைபெற வேண்டும் என கல்லூரி முதல்வர் விருப்பம் தெரிவித்தார். காட்பாடியில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் மரம் நடும் விழா கொண்டாடினர்.

Label