OUR CLIENTS
வேலூர் தேர்தலை ரத்து செய்ய முன்னாள் எம்.எல்.ஏ, மனு!
வேலூர் தேர்தலை ரத்து செய்ய முன்னாள் எம்.எல்.ஏ, மனு! Posted on 12-Jul-2019 வேலூர் தேர்தலை ரத்து செய்ய முன்னாள் எம்.எல்.ஏ, மனு!

வேலூர், ஜூலை 12
 வேலூர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என ராணிப்பேட்டை சட்டசபை தொகுதி காங்., முன்னாள் எம்.எல்.ஏ., அசேன் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் நேற்றுமுன்தினம் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: வேலூர் நாடாளுமன்ற  தொகுதிக்கு கடந்த ஏப்.,18ல் தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம் கோடிக்கணக்கில் தி.மு.க.,வினர் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆக.,5ல், இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஆனால் இதுவரை பணத்தை பதுக்கி வைத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே போலத்தான் ஆர்.கே.நகர், அரவக்குறிச்சி ஆகிய தேர்தல்களும் நிறுத்தப்பட்டன. அங்கும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியதன் காரணத்தையும் தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தவில்லை. தேர்தலை மீண்டும் நடத்துகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தேர்தலை நடத்தக்கூடாது. தேர்தலை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., கட்சியை சேர்ந்தவரே பணம் கொடுக்க முயன்ற தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தலை நிறுத்த வேண்டும் என மனு கொடுத்துள்ளது கூட்டணி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Label