OUR CLIENTS
மரம் வெட்டும் ஆலையில் 14 கொத்தடிமைகள் மீட்பு!
மரம் வெட்டும் ஆலையில் 14 கொத்தடிமைகள் மீட்பு! Posted on 12-Jul-2019 மரம் வெட்டும் ஆலையில் 14 கொத்தடிமைகள் மீட்பு!

வேலூர், ஜூலை 12-
 ஏழு ஆண்டுகளாக மரம் வெட்டும் ஆலையில் கொத்தடிமைகளாக இருந்த 14 பேர் மீட்கப்பட்டனர். 

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பருவமேட்டில், மரம் வெட்டும் ஆலை ஒன்றில் கொத்தடிமைகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துக்கு தகவல் கிடைத்தது. இதன்படி ராணிப்பேட்டை சார் ஆட்சியர்  இளம்பகவத் தலைமையில் அரக்கோணம் தாசில்தார் ஜெயகுமார், கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்க ஒருங்கிணைப்பாளர் சம்பத் ஆகியோர் நேற்றுமுன்தினம் நண்பகல் 12:00 மணிக்கு மரம் வெட்டும் ஆலைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது நான்கு பெண்கள் ஆறு குழந்தைகள், நான்கு ஆண்கள் என 14 பேர் ஏழு ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து 14 பேரையும் அதிகாரிகள் மீட்டனர். விசாரணையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் 1,000 ரூபாய் கொடுத்து கொத்தடிமைகளாக வேலையில் சேர்த்ததும் தற்போது 35 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுவதாக ஆலை உரிமையாளர் கோவிந்தன்(55) கூறியதும் தெரிய வந்தது. அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் புகாரின்படி அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான ஆலை உரிமையாளர் கோவிந்தனை தேடி வருகின்றனர்.

Label