OUR CLIENTS
மாநில பொருளாளர் தேர்வு!
மாநில பொருளாளர் தேர்வு! Posted on 12-Jul-2019 மாநில பொருளாளர் தேர்வு!

பேர்ணாம்பட்டு, ஜூலை 12-
மாநில எஸ்.சி, எஸ்.டி, அரசு ஊழியர் சங்க மாநில பொருளாளராக ஆசிரியர் ஆதி.முத்துக்குமரன் தேர்வு செய்யப் பட்டுள்ளார். மாநில எல்.சி.,.எஸ்.டி., அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தேர்தல் சென்னையில் உள்ள இக்ஷாஹால் ஜீவன் ஜோதி மையத்தில் நடைபெற்றது.

இத்தேர்தலுக்கு தேர்தல் அலுவலரும், எஸ்.சி.., எஸ்.டி., ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளருமான இ.அன்பரசு தலைமை வகித்தார். இத்தேர்தலில் மாநில எஸ்.சி.,.எஸ்.டி., செயல் தலைவர் தேனி க.சுப்பிரமணி, மாநில எஸ்.சி.,.எஸ்.டி., பிரிவு தலைவர் டாக்டர் க.மனுவேல் ஆகியோரின் உறுதுணையுடன் பேர்ணாம்பட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஆதி.முத்துகுமரன், மாநில எஸ்.சி.,.எஸ்.டி., பிரிவு பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார். ஆசிரியர் ஆதி.முத்துக்குமரன் வேலூர் மாவட்ட எஸ்.சி., .எஸ்.டி., பிரிவு செயலாளராக இருந்தவர், தன்னாலான சமூக சேவையும் செய்து வருபவர் ஆவார். 

Label