OUR CLIENTS
குடிநீர் கேட்டு மோர்தானா பகுதி மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் முற்றுகை!
குடிநீர் கேட்டு மோர்தானா பகுதி மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் முற்றுகை! Posted on 12-Jul-2019 குடிநீர் கேட்டு மோர்தானா பகுதி மக்கள்  பி.டி.ஓ., அலுவலகத்தில் திடீர் முற்றுகை!

பேர்ணாம்பட்டு, ஜூலை 12-
பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோர்தானா ஊராட்சியில் கடந்த இருபது நாட்களாக கடும் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் பல முறை எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவதாகத் தெரியவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த மோர்தானா ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் பேர்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீரென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்துக்கு அ.தி.மு.க., ஊராட்சி செயலாளர் என்.ஆனந்தன் தலைமை வகித்தார்.

 ஊர் நாட்டாண்மைதாரர் எல். நாகரத்தினம், துணை நாட்டாண்மைதாரர் பு.கிருஷ்ணன், முன்னாள் அ.தி.மு.க., ஊராட்சி செயலாளர் எம்.ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த அதிகாரிகள் சமரசம் செய்ததைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர்.

Label