OUR CLIENTS
வேலூர் ஆவின் பொது மேலாளர் சஸ்பெண்ட்!
வேலூர் ஆவின் பொது மேலாளர் சஸ்பெண்ட்! Posted on 12-Jul-2019 வேலூர் ஆவின் பொது மேலாளர் சஸ்பெண்ட்!

வேலூர், ஜூலை 12-
வேலூர் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாக அதன் பொது மேலாளர் கோதண்டராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆவின் மேலாண் இயக்குநர் காமராஜ் பிறப்பித்துள்ளார். 

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு ஒன்றியமான ஆவின் தலைமை அலுவலகம் சத்துவாச்சாரியில் இயங்கி வருகிறது. இங்கு தினமும் இரு மாவட்ட பால் உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 5.16 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மீதமுள்ள பாலில் 72 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டாகவும், நெய், பால் கோவா, மோர், லஸ்ஸி உள்ளிட்ட துணைப் பொருள்களும் தயாரிக்கப் படுகின்றன. இந்நிலையில், பால் கொள்முதலில் தண்ணீர் கலந்து முறைகேடு செய்யப்பட்டிருப்பது அண்மையில் நடந்த தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஆவின் அதிகாரிகள் 5 பேர் இடைநீக்கம் செய்யப் பட்டனர். 

இதன்தொடர்ச்சியாக ஆவின் பொது மேலாளர் கோதண்டராமன் கடந்த செவ்வாய்க்கிழமை திடீரென பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை ஆவின் மேலாண் இயக்குநர் காமராஜ் பிறப்பித்தார். நிர்வாகக் காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. 

Label