OUR CLIENTS
அனுமதியின்றி அத்துமீறி பள்ளி கட்டடம்! அனைகுன்றத்தில் கிறிஸ்துவ பாதிரியார் அத்துமீறல்!
அனுமதியின்றி அத்துமீறி பள்ளி கட்டடம்! அனைகுன்றத்தில் கிறிஸ்துவ பாதிரியார் அத்துமீறல்! Posted on 12-Jul-2019 அனுமதியின்றி அத்துமீறி பள்ளி கட்டடம்! அனைகுன்றத்தில் கிறிஸ்துவ பாதிரியார் அத்துமீறல்!

காஞ்சிபுரம், ஜூலை 12-
அனைகுன்றத்தில் முறைப்படி அனுமதி பெறாமல் கல் குவாரிக்கு எதிரில் தனியார் பள்ளி கட்டடத்தை கட்டி வருகிறார் கிறிஸ்துவ பாதிரியார். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, எலப்பாக்கம் அஞ்சல், அனைக்குன்றம் கிராமத்தில் சர்வே எண் 1/1ஏ2 வில் வருண் பட்டேல் ரஃப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி கடந்த 30 ஆண்டுகளாக தனி நபர் வசம் சொந்த இடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் முறையாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர், சென்னை கிண்டியில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் முறைப்படி அனுமதி வாங்கி இந்த குவாரி சுமார் 4.50 ஹெக்டேர் நிலத்தில் செயல்படுகிறது. 

இந்த குவாரி கடந்த 4.7.2018 முதல் முறைப்படி இயங்குகிறது. இதே தேதியில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா குவாரி முறைப்படி இயங்க அனுமதி கொடுத்துள்ளார். இந்த குவாரி செயல்படத் தொடங்கியதும் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர், மதுராந்தகம் வட்டாட்சியர், அனைக்குன்றம் கிராம நிர்வாக அலுவலர், படப்பை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் குவாரிக்கு நேரில் வருகை தந்து பார்வையிட்டு விட்டுச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அரசு விதிமுறைகளை மீறி 300 மீட்டர் இடைவெளி கூட இல்லாமல் குவாரிக்கு எதிரில் எவ்வித அனுமதியும் இல்லாமல் செயின்ட் மேரீஸ் மெட்ரிகுலேஷன் ரெசிடென்ஷியல் அண்ட் டே ஸ்கூல் நடத்திட குட் நியூஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் பள்ளி கட்டடம் அவசர அவசரமாக கட்டப்பட்டு வந்தது. இதற்காக அருகில் இருந்த ஏரியில் மண்ணை எடுத்துள்ளதாக அருகில் உள்ள கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வருவாய் ஆய்வாளர் பரஞ்ஜோதி அந்த தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அபாரதம் விதித்தார். அந்த அபராத தொகையை பள்ளி நிர்வாகம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் அந்த பள்ளியை எப்படியாவது இந்த கல்வியாண்டிலேயே இயக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அச்சிறுபாக்கம் அருகில் உள்ள விளாங்காடு ஜேக்கப் சிபிஎஸ்சி பள்ளியில் படித்து வந்த 50 மாணவர்களை மாற்றுச் சான்றிதழ்களை வாங்கச் சொல்லி தொந்தரவு செய்துள்ளனர். 
செயின்ட் மேரீஸ் பள்ளி நிர்வாகி பாதிரியார் அசோக்குமார் ஜாய் சொன்னதை நம்பி மாற்றுச் சான்றிதழ் வாங்கிய மாணவர்கள், அந்த பள்ளி சொன்ன மாதிரி ஆரம்பிக்காததால் மீண்டும் தாங்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிய ஜேக்கப் பள்ளியிலேயே மீண்டும் சேர்ந்து விட்டனர். 

சுற்றுபுற கிராமத்தில் அனைத்து சாதியினரும் அமைதியாக இணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களது அறியாமையையும், ஏழ்மை நிலையையும்  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மத மாற்றம் செய்யவே அங்கு  பள்ளியே ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும், அவர்கள் மூளையை சலவை செய்து மதமாற்றம் செய்ய இந்த கல்வி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக சுற்றுப்புற  கிராம பொதுமக்கள் கதை கதையாக அதிர்ச்சி தகவல்களை கூறுகின்றனர்.  

அதுமட்டுமின்றி எலப்பாக்கம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் தன் வசம் எடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறார் என்று  கிராம மக்கள் தெரிவித்தனர். 

அரசு அதிகாரிகள் வாய்வழி உத்தரவு! இதுகுறித்து காலச்சக்கரம் நாளிதழ் செய்திப்பிரிவுக்கு கிராம மக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து காலச்சக்கரம் நாளிதழ் செய்திப்பிரிவுக்கு செல்லிடப்பேசியில் பேசிய பாதிரியார் அசோக்குமார் நாங்கள் அனுமதி பெற விண்ணப் பித்துள்ளோம். எங்கள் மீது பொய் புகார் அளிக்கின்றனர் என்றார். பொய்யாக எங்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. சமூக சிந்தனையோடு செய்வதாக கூறினார். 

இதனை கேட்ட காலச்சக்கரம் நாளிதழ் செய்திப்பிரிவினர் “செய்தியாளர்களாகிய நாங்கள் ஒருதலைபட்சமாக செயல்படுபவர்கள் அல்ல”  என்று கூறினர். 

பிறகு குவாரி குறித்து பல்வேறு கேள்விகளையும், ஆவணங்களையும் நாங்கள் ஆராய்ந்து சரிபார்த்தும், அவர்களிடமும் இதை பற்றி பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தோம், பொதுமக்களிடமும் இதுகுறித்து கேட்டறிந்தோம். முறையான அனுமதியுடன் குவாரி செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குவாரிக்கு அருகாமையில் பள்ளி ஆரம்பிக்க முறையான அனுமதி பெற்றுள்ளீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அனுமதி குறித்து கேட்ட அனைத்து  கேள்விகளுக்கும் கிடைத்த ஒரே பதில் “விண்ணப்பித்துள்ளோம்”  “அனுமதி கிடைத்துவிடும்”  என்ற பதில் மட்டுமே அளித்தார்.  

அனுமதி கிடைக்காமல் பள்ளி கட்டடம் கட்ட ஆரம்பித்துள்ளீர்களே எப்படி என்று கேள்வி எழுப்பியதற்கும், அனுமதி பெறாமல் நடப்பு கல்வி ஆண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு செய்தது எப்படி என்று கேள்வி எழுப்பிதயற்கும்,    இது குறித்து மென்மேலும் கேள்வி எழுப்பியதற்கும் அதிகாரிகள் வாய் வழி உத்தரவு அளித்துள்ளனர் என்றும், அதிகாரிகள் அவர்களிடம் விலை போய்விட்டது போன்று அதிகாரிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார் பாதிரியார் அசோக்குமார் ஜாய். இது அதை விட பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாங்கள் விரைவில் அனுமதி வாங்கி விடுவோம். அனைவரையும் பார்த்து விட்டோம் என்று  இரட்டை அர்த்தம் கொண்டே பதில் அளித்தார்.

பள்ளி ஆரம்பிக்கும் முன்பே, அனுமதி வாங்காத முன்பே அதிகாரிகள் மீது குற்றம் சாட்டும் இவர்கள், பள்ளி ஆரம்பித்த பின்பு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும் அதிகாரிகளையே குற்றம் சாட்டுவார்கள் என்பதையே இவர்களது நடவடிக்கையை தெள்ளத் தெளிவாக காட்டுகின்றது. 

குவாரிக்கு அருகாமையில் பள்ளி ஆரம்பிப்பது முற்றிலும் முரணானது, சட்டத்திற்கு புறம்பானது, அத்துமீறும் செயலும் கூட. இது குழந்தைகள் உயிர் சம்மந்த பட்ட விஷயம்.   ஆனால் அரசு விதிமுறைகளை மீறி 300 மீட்டருக்கு குறைவாக குவாரிக்கு எதிரில் பள்ளி தொடங்கிட நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறது இந்த கல்வி நிறுவனம். 
பாதிரியார் என்று பெயர் வைத்துக் கொண்டு வாயைத் திறந்தாலே அரசு உயரதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், பள்ளி கல்வி அமைச்சர் போன்றவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகிறார் இந்த அசோக்குமார் ஜாய்.  
பள்ளி என்ற பெயரில் மதமாற்றமா...?

இந்த பள்ளி நிர்வாகம் சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது என்று கூறப்படுகிறது. வேனில் 50 பேர் அழைத்து வரப்பட்டு மதமாற்றம் செய்வதற்கான பிரசாரத்தை மேற்கொள்கின்றது இந்த நிர்வாகம். இப்படி இந்த கிராமத்தில் புகுந்த குட் நியூஸ் சாரிடபிள் டிரஸ்ட் மதக் கலவரத்தை தூண்டும் செயலில் வெளிப்படையாகவே ஈடுபடுகிறது. இதனால் எலப்பாக்கம் கிராம மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். 

இதை மறைக்க பள்ளி நிர்வாகம் நாங்கள் இலவசமாக கல்விச் சேவை அளிக்கப் போகிறோம் என்று பிரசாரம் செய்து வருகிறது. இதற்காக சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களில் விளம்பர பேனர்களை கட்டி விளம்பரம் செய்துள்ளது இந்த பள்ளி நிர்வாகம். பாதிரியாரே இப்படி பொய் பிரசாரம் செய்து வந்தால் அவர்களால் நடத்தப்படும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நிலைமை என்னவாகும் என்று கேள்வி எழுப்புகின்றனர் கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும். 

கிறிஸ்துவ பாதிரியார் நடத்தும் பள்ளி என்றால் ஒழுக்கம் இருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது. அப்படியே பள்ளி செயல்பட தொடங்கினால் பள்ளி மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடுப்பது யார்?. பாறைகளை உடைக்க டெட்டனேட்டர்கள் பயன்படுத்தினால் பாறைகள் வெடித்து சிதறி மாணவ, மாணவிகள் மீது விழும் பேராபத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனைக் கருத்தில் கொள்ளாமல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வந்து எந்தவித முன் அனுமதியும் பெறாமல் கட்டடம் கட்டி பள்ளி நடத்த முயற்சி செய்கின்றனர். பள்ளி என்கின்ற பெயரில் சிறுபிள்ளைகளை மூளை சலவை செய்து மதமாற்றம் செய்ய உள்ளதாகவும், கிராம மக்களை வசப்படுத்தவும் அதீத முயற்சி செய்து வருகின்றனர். 
அத்துடன் நிற்காமல் எலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களை தூண்டி விட்டு குவாரிக்கு எதிராக செயல்பட வைத்து பார்த்துள்ளார் பாதிரியார் அசோக்குமார் ஜாய். ஆனால் பாதிரியார் நினைத்தது போன்று எதுவும் நடக்கவில்லை. கிராம மக்கள் குவாரி நடத்துவோர் முறையாக அனுமதி பெற்று நடத்துவதால் அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுகின்றனர். நீயா, நானா என்று பார்த்து விடுகிறேன் என்று பாதிரியார் குவாரி நடத்துவோரிடம் சவால் விட்டுள்ளதாகவும் கிராம பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிரியாரின் கொக்கரிப்பு எதுவும் செல்லுபடியாகவில்லை. குவாரி நடத்துவோர் முறையாக நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 ஏக்கர் பரப்பளவில் நிலம் வாங்கி வைத்துக் கொண்டு எலப்பாக்கம் கிராமத்தையே ஆட்டிப்படைக்க நினைக்கிறார் இந்த பாதிரியார் அசோக்குமார் ஜாய் என்று சொன்னால் அது மிகையாகாது. அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு பின்னர் செய்தி வெளியிட்டு வரும் காலச்சக்கரம் நாளிதழ் புலனாய்வு செய்தியாளர் குழு கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்ததோடு கேட்ட கேள்விக்கு பாதிரியார் அசோக்குமார் ஜாயிடம் தெளிவான பதில் இல்லை. இப்படி அமைதியாக கிராமத்தில் மதக்கலவரத்தை விதைக்க புறப்பட்டுள்ள பாதிரியார் அசோக்குமார் ஜாய் போன்றவர்கள் சிறுபான்மையினர் என்று பெயர் வைத்துக் கொண்டு பெரும்பான்மையோர் வாழும் இடத்தில் அமைதியை சீர் குலைக்க திட்டமிட்டு செயல்படுகிறார். 
ஆன்மிகத்துக்கு பெயர்போன காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுபோன்ற செயல் ஏற்புடையதல்ல என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு அத்துமீறி முறைப்படி அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் பள்ளியை நிரந்தரமாக மூடி சீல் வைக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், ஆன்மிக பெரியவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக அரசும் இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  இந்த பள்ளி விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்நிலையில் இந்த பள்ளி விஷயத்தில் அரசு அதிகாரிகள் என்னதான் நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label