OUR CLIENTS
பேர்ணாம்பட்டு தாலுகாவில் தொடரும் தண்ணீர் பிரச்சனை நீங்குவது எப்போது?
பேர்ணாம்பட்டு தாலுகாவில் தொடரும் தண்ணீர் பிரச்சனை நீங்குவது எப்போது? Posted on 12-Jul-2019 பேர்ணாம்பட்டு தாலுகாவில் தொடரும்  தண்ணீர் பிரச்சனை நீங்குவது எப்போது?

பேர்ணாம்பட்டு, ஜூலை 12-
பேர்ணாம்பட்டு தாலுகாவில் தொடரும் தண்ணீர் பிரச்சனை நீங்குவது எப்போது? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

பேர்ணாம்பட்டு தாலுகாவில் ஏகப்பட்ட தில்லு முல்லு வேலைகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பத்தலபல்லியில் பல ஏக்கர் கணக்கில் உரிமம் பெறாத மணல் குவாரிகள் திருட்டுத்தனமாக நடைபெற்று வருகிறது. பத்தலபல்லியில் அணைக்குப்பக்கதில் மிகப் பெரிய அளவில் மணல் குவாரி ஒன்று திருட்டுத்தனமாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு உரிமம் பெறாக மணல் குவாரிகளையும். இதே பகுதியைச் சேர்ந்தவர் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது. 

இதைக்கண்டு கொள்ளாமல் இருக்க ஒரு லகரம், அரை லகரம் என்று மாதாமாதம் அந்த நிழல் மனிதர் வருவாய் துறைக்கு கப்பம் கட்டுவதாகவும் கூறப்படுகிறது, மேலும் அந்த நபர் பத்தலபல்லி ஆற்றுப்படுகையில் 1 மீட்டர் தொலைவிலிருந்து தண்ணீரை உறிஞ்சி இப்பகுதியில் உரிமம் பெறாமல் செங்கல் சூளைகள் நடத்தி வரும் கும்பலுக்கு அதாவது சமூக விரோதிகளுக்கு தண்ணீரை விற்பனை செய்வதாகவும் 100 மீட்டர் இடை வெளியில் எடுக்க வேண்டிய ஆற்று நீரை 10 மீட்டர் இடைவெளியில் சட்டத்திற்கு விரோதமாக உறிஞ்சுவதாகவும் கூறப்படுகிறது.  இதனால் பத்தலபல்லி பகுதியில் விவசாயம் செய்து வரும் முத்தம்மானுக்கு 1 கிணறும் போரும், லட்சுமிக்கு கிணறும், போரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரந்தாமனுக்கு கிணறும், 2 போரும், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் வழக்கறிஞர் வாசுகி பாண்டியனுக்கு  1 கிணறும், சேட்டு என்பவருக்கு 1 கிணறும், செல்வம் முருகேசனுக்கு தலா 1 கிணறும் பொய்த்துப் பலனற்றுப் போய்விட்டது என்றும் இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு பத்தலப்பல்லி பகுதியில் உள்ள மணல் குவாரிகளை தடைசெய்யக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வாரம் பேர்ணாம்பட்டு தாலுகா தொண்ணப்பாறையில் வசிக்கும் மறைந்த திரைப்பட நகைச்சுவை நடிகர் பெயரைக் கொண்டவர் பொகளுர் ஊராட்சியின் கீழ் வரும் ஆலங்குப்பத்தில் கல்குவாரி நடத்தி வருகிறார்;        அவர் வசிக்கும் பகுதியில் உரிமம் பெறாத ஒரு மலையில் வெடி வைத்து கட்டுக்கற்களையும், சக்கைகளையும் விற்பனை செய்துள்ளார். 

இதைக் கேள்விபட்டு கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி சென்று விசாரித்துள்ளார். இது பற்றி தகவலறிந்த மண்டல துணைத் தாசில்தார் பழனியும், கல்குவாரி ஒப்பந்ததாரரிடம் உரிமம் பெறாத மலைக்கு நீ எப்படி வெடி வைத்து கட்டுக்கற்களையும் விற்பனை செய்யலாம் என்று விசாரித்துள்ளார்.  பேர்ணாம்பட்டு தாலுகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உரிமம் பெறாமல் இயங்கி வருகிறது. இதுகுறித்து இன்னமும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. பேர்ணாம்பட்டு: தாலுகாவில் நடைபெறும் இதுபோன்ற சமூக விரோதச் செயல்களை வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உரிய நடவடிக்கை எடுத்து தவறு செய்யும் அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பேர்ணாம்பட்டு நகர பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  

Label