OUR CLIENTS
அரசியலுக்கு அழைத்த கலாம் உதவியாளர்: மறுத்த ரஜினி
அரசியலுக்கு அழைத்த கலாம் உதவியாளர்: மறுத்த ரஜினி Posted on 07-Sep-2016 அரசியலுக்கு அழைத்த கலாம் உதவியாளர்: மறுத்த ரஜினி

சென்னை:
அரசியல் கட்சி துவங்கி நடத்தி வரும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.


முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளராகவும், ஆலோசகராகவும் இருந்தவர் பொன்ராஜ். அவர் லட்சிய இந்தியா இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை துவங்கி நடத்தி வருகிறார்.

கலாமின் லட்சிங்களை நிறைவேற்றவே கட்சி துவங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வந்துள்ள பொன்ராஜ் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசியுள்ளார்.

ரஜினி நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பொன்ராஜ் ரஜினியிடம் தெரிவித்தாராம். அதற்கு ரஜினியோ, கடவுளின் விருப்பம் அதுவாக இருந்தால் நடக்கும் என்று கூறினாராம்.

நதி நீர் இணைப்புத் திட்டத்தில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் பொன்ராஜ். நதிகளை இணைக்க தனது பாக்கெட்டில் இருந்து ரூ.1 கோடி அளிப்பதாக ரஜினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தார். தற்போது காவிரி பிரச்சனை தலைதூக்கியுள்ள நிலையில் பொன்ராஜ், ரஜினி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அரசியல் 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் இருந்து தனது ஆதரவை தெரிவித்து வந்த ரஜினி தற்போது அரசியலில் இருந்து ஓதுங்கியுள்ளார். அவரை தங்கள் பக்கம் இழுக்க சில கட்சிகள் முயன்றும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Label