OUR CLIENTS
பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலில் 80 பேர் பலி - இந்தியர்களுக்கு பாதிப்பில்லை
பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலில் 80 பேர் பலி - இந்தியர்களுக்கு பாதிப்பில்லை Posted on 15-Jul-2016 பிரான்ஸ் தீவிரவாத தாக்குதலில் 80 பேர் பலி - இந்தியர்களுக்கு பாதிப்பில்லை

பாரிஸ்:
'பாஸ்டில் தினம்’ எனப்படும் பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் நேற்று நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

அவ்வகையில், மொனாக்கோ நகரில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நீஸ் நகர மக்களும் நகரின் பிரதான சாலையில் கூட்டமாக திரண்டு தேசிய தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அப்போது, அந்த சாலை வழியாக வேகமாக வந்த ஒரு கனரக வாகனம் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்தது.

வேகம் சற்றும் குறையாமல் திரளாக இருந்த மக்களை மோதித் தள்ளியபடி சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அந்த வாகனம் முன்னேறிச் சென்றது. இதில் ஏராளமான மக்கள் வாகனத்தின் டயர்களுக்கு அடியில் சிக்கி நசுங்கினர். தீவிரவாதிகளின் சதிவேலை என கருதப்படும் இந்த கொடூர தாக்குதலில் முதலில் 60 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அந்த கனரக வாகனத்தை ஓட்டி வந்தவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்த தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், ‘பாரிஸ் நகரில் உள்ள இந்திய தூதர் அங்கிருக்கும் இந்திய சமூகத்தவர்களிடம் தொடர்புகொண்டு அறிந்துள்ள தகவலின்படி, நீஸ் தாக்குதலில் இந்தியர்கள் யாருக்கும் எவ்வித பாதிப்புமில்லை என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, மேலும் தகவல் அறிய விரும்புபவர்களுக்காக பாரிசில் உள்ள இந்திய தூதரகத்தில் 33-1-40507070 என்ற 24 மணிநேர அவசர தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Label