OUR CLIENTS
சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிரான தாக்குதல்: ரஷ்யாவின் ஒத்துழைப்பை நாட அமெரிக்கா தீர்மானம்
சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிரான தாக்குதல்: ரஷ்யாவின் ஒத்துழைப்பை நாட அமெரிக்கா தீர்மானம் Posted on 15-Jul-2016 சிரியாவில் ஐ.எஸ்-க்கு எதிரான தாக்குதல்: ரஷ்யாவின் ஒத்துழைப்பை நாட அமெரிக்கா தீர்மானம்

மாஸ்கோ:
சிரியாவில் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில், இராணுவம் மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிக்க ரஷ்யாவின் உதவியை நாட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


அமெரிக்கா வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக நேற்று(வியாழக்கிழமை) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்கு சென்றுள்ளார்.

அங்கு அதிபர் விளாதிமீர் புதினை நேற்று மாலை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, சிரியாவில் ஐ.எஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில், இராணுவம் மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும், இந்த சந்திப்பின் போது ஐ.எஸ் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவின் உதவியை நாடுவது தொடர்பான தீர்மானம் ஒன்றினை ஜான் கெர்ரி, புதினிடம் அளித்தார். இந்த சந்திப்பின் போது. அதிபர் பராக் ஒபாமா உடனான சந்திப்பை புதின் நினைவு கூர்ந்தார்.

இதனை தொடர்ந்து வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லவ்ரோவை ஜான் கெர்ரி இன்று சந்திக்க உள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக அமெரிக்க மூத்த அதிகாரி கூறுகையில், “ஜான் கெர்ரி, ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-கொய்தா ஆகிய அமைப்புகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவார். அதேபோல், சிரியாவை வன்முறையை குறித்து மனிதாபிமான செயல்பாடுகளுக்கும், அரசியல் மாறுதல்களுக்கும் அனுமதிப்பது குறித்தும் விவாதிப்பார்” என்று தெரிவித்திருந்தார்.

Label