OUR CLIENTS
நீஸ் தாக்குதலுக்கு ஒபாமா, மோடி கண்டனம்
நீஸ் தாக்குதலுக்கு ஒபாமா, மோடி கண்டனம் Posted on 15-Jul-2016 நீஸ் தாக்குதலுக்கு ஒபாமா, மோடி கண்டனம்

வாஷிங்டன்:
பிரான்ஸ் நாட்டின் தேசிய தினவிழா கொண்டாட்டத்தின்போது, நீஸ் நகரில் மக்கள் கூட்டத்திற்குள் கனரக வாகனம் புகுந்ததில் 80-க்கும் அதிகமானோர் பலியாகினர்.


உலக மக்களின் மனங்களில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதலுக்கு உலகின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘பிரான்ஸ் நாட்டின் நீஸ் நகரில் தீவிரவாத தாக்குதல் பாணியில் நடத்தப்பட்டுள்ள இந்த பயங்கரமான தாக்குதலுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான புலன் விசாரணைக்கு உதவி செய்வதுடன் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த தேவையானவற்றை செய்ய தயாராக இருப்பதாகவும் ஒபாமா உறுதி அளித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இதுதொடர்பாக தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், நீஸ் நகர தாக்குதல் தொடர்பான தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். அறிவீனமான இதுபோன்ற வன்முறை செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

இந்த தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களுடைய சோகத்தில் எனது நினைவுகளும் கலந்துள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன். இந்த சோகமான வேளையில் நமது பிரெஞ்சு சகோதர-சகோதரிகளின் வலியை பகிர்ந்து கொள்வதுடன், அவர்களுடன் உறுதியான உறுதுணையாக இந்தியா இருக்கும்’ என கூறியுள்ளார்.

Label