OUR CLIENTS
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை!
அந்தமானில் மிதமான நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை! Posted on 15-Sep-2016 அந்தமானில் மிதமான நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை!

போர்ட்பிளேயர்:
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று காலை 8 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.


அந்தமான் தீவுப் பகுதிகளில் இன்று காலை 8 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது போர்ட்பிளேயரில் இருந்து 199 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்தது.

இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு வந்தனர்.

அப்போது கடல் சற்று சீற்றமாக இருந்தது. ஆனாலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.

Label