OUR CLIENTS
சௌந்தர்யா ரஜினி காதல் கதை
சௌந்தர்யா ரஜினி காதல் கதை Posted on 19-Sep-2016 சௌந்தர்யா ரஜினி காதல் கதை


சௌந்தர்யா ரஜினிகாந்த்தின் 6 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவு பெற்றுள்ளது.

காதலித்து திருமணம் செய்துகொண்ட சௌந்தர்யா, ஒரு பேட்டியில் தன்னுடைய காதல் விவகாரத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அஸ்வினை முதன்முதலில் ஜிம்மில் சந்தித்த போது, சிரிப்பது, வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொள்வது என்று இருந்தோம்.

ஒருநாள் அவர் என்னிடம், நீங்கள் ரஜினி மகள் தானே, நான் அவருடைய தீவிர ரசிகன் என்று கூறினார். அதன்பிறகு ஐந்து ஆண்டுகள் சந்திக்காமல் நண்பரின் விழாவில் சந்தித்தோம்.

அப்போது என்னை மீண்டும் அன்று பேசிய அதே இடத்துக்கு அழைத்துச்சென்று ப்ரபோஸ் செய்தார். அப்போது அஸ்வின் எனக்கு அணிவித்த மோதிரம் என் அப்பாவின் சம்மதத்தோடு அவர் அணிவித்ததாக கூறினார்.

அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கிய பிறகுதான் என்னிடம் பேசினார் அஸ்வின். அப்பா ஈஸியாக ஒப்புக்கொண்டாலும், அஸ்வின் என் குடும்பத்துடன் செட் ஆகவில்லை.

திருமணத்துக்குப் பிறகு மூன்று வருடங்கள் ஆகிவிட்ட போதும்கூட பல விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.  

Label