OUR CLIENTS
அப்துல் கலாமின் பெயரை பயன்படுத்த அரசியல் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு
அப்துல் கலாமின் பெயரை பயன்படுத்த அரசியல் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு Posted on 22-Sep-2016 அப்துல் கலாமின் பெயரை பயன்படுத்த அரசியல் கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை:
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அப்துல் கலாமின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்த போது, அப்துல் கலாமின் பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி கவுரவ தலைவரும், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகருமான வி.பொன்ராஜ் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு விசாரணையின்போது, இந்திய தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘தேசிய தலைவர்களின் பெயரை அரசியல் கட்சியினர் பயன்படுத்துவதை தடுக்க முடியாது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே அப்துல் கலாம் பெயரை பயன்படுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளை நிர்ப்பந்திக்க முடியாது’ என்று கூறியிருந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், அப்துல் கலாமின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்த அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடைகளை நீக்கி உத்தரவிட்டார்.

Label