OUR CLIENTS
கொள்ளையடிக்க வந்த திருடனை வீட்டில் வைத்து பூட்டிய பெண்
கொள்ளையடிக்க வந்த திருடனை வீட்டில் வைத்து பூட்டிய பெண் Posted on 24-Sep-2016 கொள்ளையடிக்க வந்த திருடனை வீட்டில் வைத்து பூட்டிய பெண்

சுவிஸ்:
சுவிட்சர்லாந்து நாட்டில் வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்த திருடனை பெண் ஒருவர் வீட்டிற்குள் வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சூரிச் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் பெண் தூங்க சென்றபோது திடீரென வினோதமான ஓசை எழுந்துள்ளது.

படுக்கை அறைக்கு வெளியே வந்து பார்த்தபோது அங்கு சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் இருட்டில் நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர், நபரை பார்த்து கத்தி கூச்சலிட்டதும் அவர் வெளியே சென்று துணி துவைக்கும் அறைக்குள் புகுந்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட பெண் அந்த அறையை பூட்டியுள்ளார்.

வீட்டிற்கு வெளியே வந்த அப்பெண் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அங்கு வந்த பொலிசார் 33 வயதான அந்த கொள்ளையனை கைது செய்து அவரிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும், கொள்ளையனை எதிர்த்து துணிச்சலாக போராடி அறையில் வைத்து பூட்டிய பெண்ணை போலீசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

Label