OUR CLIENTS
துருக்கியில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தல்
துருக்கியில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தல் Posted on 16-Jul-2016 துருக்கியில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க  வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தல்

துருக்கி:
துருக்கி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் அந்நாட்டு இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பல்வேறு இடங்களில் இராணுவத்தினருக்கும், அரசு தரப்பு படையினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், துருக்கியில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு தூதரகம் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்கள் நிலைமை கட்டுக்குள் வரும் வரை பொது இடங்களில் நடமாடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

துருக்கி அவசர நிலைக்கு இந்திய தூதரகம் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்காரா: +905303142203, இஸ்தான்புல்: +905305671095 எண்கள் ஆகும்.

Label