OUR CLIENTS
வார ராசி பலன்கள் - (26-09- 2016 முதல் 03-10- 2016)
வார ராசி பலன்கள் - (26-09- 2016 முதல் 03-10- 2016) Posted on 26-Sep-2016 வார ராசி பலன்கள் -  (26-09- 2016   முதல்  03-10- 2016)

மேஷம் 

  ஆக்கப்பூர்வமாக யோசித்தை அதிரடியாக செயல்படுத்துவதில் வல்லவர்கள் நீங்கள். உங்களின் தன -சப்தமாதிபதி சுக்ரன் 7-ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் தடைப்பட்ட வேலைகளை உற்சாகமாக விரைந்து முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், தோழிகளிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அஷ்டமத்துச் சனியும், சகட குருவும் தொடர்வதால் வேலைச்சுமை, தசை பிடிப்பு, மூச்சுத் திணறல் வந்துச் செல்லும். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம்.
கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.
அரசியல்வாதிகளே! உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.
வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். தொடர் முயற்சியால் சாதிக்கும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதிஷ்ட எண்கள்: 5, 8 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு அதிஷ்ட திசை: வடகிழக்கு

ரிஷபம் 

என்கடன் பணிசெய்து கிடப்பதே என்று விருப்பு வெறுப்பில்லாமல் வேலை பார்ப்பவர்களே! குரு 5&ல் நீடிப்பதால் பழைய சிக்கல்களுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். உறவினர், தோழிகள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். சுக்ரன் 6&ல் மறைந்திருப்பதாலும், செவ்வாய் 8-ல் நிற்பதாலும் மனைவி ஏதேனும் குற்றம், குறைக் கூறுவார். பிள்ளைகள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். அவ்வப்போது சளித் தொந்தரவு, காய்ச்சல், சிறுசிறு வாகன விபத்துகள், வீண் டென்ஷன், தொண்டை வலி வந்துச் செல்லும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள்.
கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு வரும்.
அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு குறையும்.
வியாபாரத்தில் புதிய சலுகைகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் தொந்தரவுகள் இருக்கும். உணர்ச்சிவசப்படாமல் மூளைக்கு வேலை தர வேண்டிய வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 27, 30, 2 அதிஷ்ட எண்கள்: 6, 9 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட் அதிஷ்ட திசை: தெற்கு

மிதுனம் 

ஆர்பாட்டமில்லாமல் அமைதியாக சாதித்துக் காட்டுபவர்களே! ராகுவும், சனியும் வலுவாக இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். அரசாங்க வேலைகள் வேகமாக முடியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கில் எதிர்பார்த்தபடி நல்ல தீர்ப்பு வரும். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். உறவினர், தோழிகள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 7-ல் செவ்வாய் நிற்பதால் மனைவி அவ்வப்போது அலுத்துக் கொண்டாலும் பாசம் குறையாது. குருவின் போக்கு சரியில்லாததால் அடுத்தடுத்து வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள்.
கன்னிப் பெண்களே! பெற்றோரின் அரவணைப்பு அதிகரிக்கும்.
அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வி.ஐ.பிகளால் பாராட்டப்படும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 26, 27, 2 அதிஷ்ட எண்கள்: 1, 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம்வெள்ளை, ஆரஞ்சு அதிஷ்ட திசை: வடக்கு

கடகம் 

எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துக்காட்டும் அபார சக்திக் கொண்டவர்களே! செவ்வாய் 6-ம் வீட்டிலும், 3&ல் சூரியனும் வலுவாக அமர்ந்திருப்பதால் உங்களின் முன்னேற்றப் பாதையில் இருந்த தடைகள் நீங்கும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிட்டும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சிறுக சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது ஊரைத் தள்ளியிருக்கும் பகுதியில் வாங்கி விட வேண்டுமென்று நினைப்பீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சகோதரங்களால் பலனடைவீர்கள். பழைய உறவினர், தோழிகளை சந்திப்பீர்கள். 3-ல் குருவும், 5-ல் சனியும் தொடர்வதால் எதிர்காலம் பற்றிய கவலைகள், மனக்குழப்பம், பிள்ளைகளால் அலைச்சல் வந்துப் போகும்.
கன்னிப் பெண்களே! பெற்றோரை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசியல்வாதிகளே! தலைமைக்கு எதிராக பேசுபவர்களிடம் நட்பு வைத்துக் கொள்ளாதீர்கள்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்காதீர்கள். மனோ பலத்தால் நினைத்ததை முடிக்கும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 26, 27, 29 அதிஷ்ட எண்கள்: 2, 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம் அதிஷ்ட திசை: தென்மேற்கு

சிம்மம் 

போராட்டங்கள், ஏமாற்றங்களை கண்டு புலம்பாதவர்களே! குரு 2&ல் நிற்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். வழக்கு சாதகமாகும். அவரின் வருமானம் உயரும். பிள்ளைகள் முன்னேற வேண்டுமென துடிப்பார்கள். புது வேலை கிடைக்கும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். கொழுந்தனாருக்கு திருமணம் நிச்சயமாகும். விலை உயர்ந்த சமையலறை சாதனங்கள் வாங்குவீர்கள். செவ்வாய் 5&ல் நிற்பதால் மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை சுமக்க வேண்டாம். அர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் மறைமுக விமர்சனங்கள் அதிகமாகும். அடிவயிற்றில் வலி, மாதவிடாய் கோளாறு வந்து நீங்கும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழும்.
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும்.
அரசியல்வாதிகளே! எதிர்கட்சியினரை ஆதாரமின்றி விமர்சிக்க வேண்டாம்.
வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சமயோஜித புத்தியால் வெற்றி பெறும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 26, 28, 30 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், மயில்நீலம் அதிஷ்ட திசை: தெற்கு

கன்னி 

பழமையையும், பாரம்பரியத்தையும் கட்டிக் காப்பதில் வல்லவர்களே! தனாதிபதி சுக்ரன் ஆட்சிப் பெற்று 2&ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் திடீர் பணவரவு உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். வி.ஐ.பிகளின் நட்பால் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் பலம் பலவீனத்தை கண்டறிவீர்கள். சகோதர வகையில் இருந்த மோதல்கள் விலகும். சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்கு கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஜென்ம குரு தொடர்வதால் மூச்சுப் பிடிப்பு, வயிற்று உபாதைகள், தோலில் நமைச்சல் வந்துப் போகும். சிலர் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். கட்டை விரலில் அடிப்படக்கூடும். அரசு காரியங்கள் இழுபறியாகும்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். காதல் இனிக்கும்.
அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் செல்வாக்குக் கூடும்.
வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 28, 30, 2 அதிஷ்ட எண்கள்: 6, 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன் அதிஷ்ட திசை: மேற்கு

துலாம் 

நீதிக்கு புறம்பான செயல்களை செய்ய தயங்குபவர்களே! ஏழரைச் சனி தொடர்வதால் ஒரு பக்கம் சோர்வு, களைப்பு என இருந்தாலும் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஆட்சிப் பெற்று வலுவாக உங்கள் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் விடாமுயற்சி, கடின உழைப்பால் வெற்றி பெறுவீர்கள். அழகு, இளமைக் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். ஷேர் மூலம் லாபம் வரும். உறவினர், தோழிகள் வீடு தேடி வருவார்கள். ராசிக்கு 12-ல் குருவும், சூரியனும் மறைந்திருப்பதால் தூக்கமின்மை, பசியின்மை, மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகும். அரசியல்வாதிகளே! தகுந்த ஆதாரமின்றி எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம்.
கன்னிப் பெண்களே! யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். 
அரசியல்வாதிகளே!புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.
வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவுகள் நனவாகும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 26, 27, 1 அதிஷ்ட எண்கள்: 1, 9 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க் அதிஷ்ட திசை: வடமேற்கு

விருச்சிகம் 

துயரங்களை கண்டு ஒருபோதும் துவளாமல் சீறி எழுவதில் வல்லவர்கள் நீங்கள். சூரியனும், குருவும் லாப வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியம், புகழ், செல்வாக்குக் கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வீடு, மனை வாங்குவீர்கள். பதவிகள் தேடி வரும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள். உறவினர், தோழிகளால் ஆதாயம் உண்டு. என்றாலும் ஜென்மச் சனி தொடர்வதால் நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, இன்பெக்ஷன், உள்மனதில் ஒருபயம், சின்ன சின்ன போராட்டம் வந்துப் போகும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம்.
கன்னிப் பெண்களே! எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
அரசியல்வாதிகளே! எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளால் நெருக்கடிகள் வந்தாலும் சக ஊழியர்களின் ஆதரவுப் பெருகும். முற்போக்குச் சிந்தனையால் முன்னேறும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 26, 28, 29 அதிஷ்ட எண்கள்: 2, 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், பச்சை அதிஷ்ட திசை: தென்கிழக்கு

தனுசு 

தனக்கென எடுத்து வைக்கத் தெரியாத நீங்கள் தராதரம் அறிந்து பழகுபவர்கள். கேது வலுவாக அமர்ந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கட்டிட வேலையை தொடங்குவீர்கள். திருமண முயற்சிகள் பலிதமாகும். வேற்றுமதத்தவர், மாற்று மொழியினரால் உதவிகள் உண்டு. உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அயல்நாட்டிலிருக்கும் தோழிகளால் திருப்பம் உண்டாகும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். அரசாங்க விஷயம் சுலபமாக முடியும். ராசிக்குள் செவ்வாய் நிற்பதால் சிறுசிறு நெருப்புக் காயங்கள், தாழ்வுமனப்பான்மை, சகோதர வகையில் சச்சரவுகள், சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்ட வேண்டாம்.
அரசியல்வாதிகளே! கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
கன்னிப் பெண்களே! பெற்றோர் பாசமழைப் பெழிவார்கள்.
வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 27, 30, 1 அதிஷ்ட எண்கள்: 4, 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர்நீலம் அதிஷ்ட திசை: தெற்கு

மகரம் 

தன்மானம் அதிகமுள்ள நீங்கள், விமர்சனங்களை கண்டு அஞ்சமாட்டீர்கள். ராஜகிரகங்களான குருவும், சனியும் வலுவாக அமர்ந்திருப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்பொழுது நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அதிக வட்டிக் கடனை பைசல் செய்வீர்கள். சகோதரர் சரியாகப் புரிந்து கொள்வார். வேற்றுமொழிக்காரர்களால் ஆதாயம் உண்டு. சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால் இடம், பொருள், ஏவலறிந்தப் பேசப்பாருங்கள். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். எந்த விஷயமாக இருந்தாலும் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. சூரியன் 9-ம் வீட்டில் நிற்பதால் தந்தையாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசாங்க அதிகாரிகளால் தொந்தரவுகள் வரும்.
அரசியல்வாதிகளே! சகாக்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.
கன்னிப் பெண்களே! வேலைக் கிடைக்கும். சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள்.
வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் எல்லோராலும் பாராட்டப்படுவீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 26, 29, 2 அதிஷ்ட எண்கள்: 7, 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ஊதா அதிஷ்ட திசை: வடக்கு

கும்பம் 

இங்கிதமான பேச்சால் மற்றவர்களின் மனதில் எளிதில் இடம் பிடிப்பவர்களே! செவ்வாய் 11-ம் இடத்தில் வலுவாக நிற்பதால் மனப்போராட்டங்கள் நீங்கும். பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிள்ளைகள் கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிப்பீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். பழுதான மிக்சி, குக்கரை மாற்றுவீர்கள். சொந்த&பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள். சகோதரங்களின் அரவணைப்பு அதிகரிக்கும். குருவும், சூரியனும் சரியில்லாததால் முன்கோபம், வேலைச்சுமை, காரியத் தாமதம், வீண் அலைச்சல், பகைமை, பழைய கடனைப் பற்றிய பயம் வந்துச் செல்லும். வழக்கில் அவசரம் வேண்டாம்.
கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு.
அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தில் மதிப்பு, மரியாதைக் கூடும்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரி செய்வீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வார்கள்.  புது அணுகுமுறையால் முன்னேறும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 28, 30, 1 அதிஷ்ட எண்கள்: 2, 4 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ப்ரவுன் அதிஷ்ட திசை: கிழக்கு

மீனம் 

விழுவதெல்லாம் எழுவதற்கே என்பதை அறிந்த நீங்கள் இலக்கை எட்டும் வரை ஓயமாட்டீர்கள். ராகு, குரு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை இனங்கண்டறிந்து வளர்ப்பீர்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதன் 6&ல் மறைந்திருப்பதால் சளித் தொந்தரவு, நரம்புச் சுளுக்கு, ஆடம்பரச் செலவுகள், உறவினர், தோழிகளுடன் விவாதங்கள் வந்துப் போகும்.
அரசியல்வாதிகளே! கோஷ்டி பூசல்களிலிருந்து விடுபடுவீர்கள்.
கன்னிப் பெண்களே!  காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கல்யாணம் கூடி வரும்.
வியாபாரத்தில் பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அச்சம் விலகி அதிகாரம் பெருகும் வாரமிது.
அதிஷ்ட தேதிகள்: 27, 1, 2 அதிஷ்ட எண்கள்: 1, 8 அதிஷ்ட நிறங்கள்: கிளிப்பச்சை, பிங்க் அதிஷ்ட திசை: வடமேற்கு
Label