OUR CLIENTS
மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்?
மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்? Posted on 30-Sep-2016 மேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்?

நடிகர் விஷாலும், நடிகை வரலட்சுமி சரத்குமாரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. நடிகர் சங்க  தேர்தலின்போது விஷாலும், சரத்குமாரும் மோதிக் கொண்டபோதும் வரலட்சுமி காதலில் உறுதியாக இருந்தார். காதலித்தாலும் அவர்களின் திருமணம் பற்றி பேசாமல் இருந்தனர்.


காதல் முறிவு 
நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமாரை சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விஷாலுக்கும், வரலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அவர்களின் காதல் முறிந்துவிட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

ட்விட்டரில் கன்பர்ம் 
வரலட்சுமியின் ட்வீட்டை பார்த்தவர்கள் விஷால் தான் தனது மேனேஜரை தூது விட்டு வரலட்சுமியுடனான காதலை முறித்துக் கொண்டார் என்றும், அந்த கடுப்பை வரலட்சுமி ட்விட்டரில் காட்டியதாகவும் பேசினார்கள்.

வேலை 
நடிகர் சங்க கட்டிடம் கட்டியவுடன் தனக்கும், வரலட்சுமிக்கும் அங்கு திருமணம் நடக்கும் என்று விஷால் தெரிவித்தார். அப்போது கூட நான் என் வேலையை மட்டுமே காதலிக்கிறேன் என்றார் வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

Label