OUR CLIENTS
ராமேசுவரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம்
ராமேசுவரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் Posted on 30-Sep-2016 ராமேசுவரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடி சாமி தரிசனம்

ராமேசுவரத்தில் மகாளய அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

தென்னகத்து காசி என்றழைக்கப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ராமநாத சுவாமியை வழிபட்டால் பாவங்கள் தீரும் என்பதும், அதிலும் அமாவாசை நாளில் ராமேசுவரத்தில் வழிபாடு நடத்துவது மிகுந்த பலன்களை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதன்படி மாதந்தோறும் வரும் அமாவாசை தினத்தன்று ராமேசுவரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். சிறப்பு வாய்ந்ததாக கூறப்படும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசையன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

அதன்படி இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ராமேசுவரத்துக்கு ரெயில், பஸ், வேன், கார்களில் வந்து குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. இன்றும் பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

மகாளய அமாவாசை யான இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். முன்னதாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ராமேசுவரம் கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. புனித நீராடிய பக்தர்கள் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று அங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்துக்கு பொது மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அக்னி தீர்த்த கடல், கோவில், பஸ் நிலை யம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின்பேரில் ஏ.டி. எஸ்.பி. வெள்ளத்துரை, டி.எஸ்.பி.முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்தனர். போக்கு வரத்தை இன்ஸ்பெக்டர் சண்முகய்யா தலைமையில் போலீசார் சரி செய்தனர்.

மேலும் மப்டியிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை நகராட்சி ஆணையர் ஜெயராம் ராஜா, சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் மற்றும் ஊழியர் கள் செய்திருந்தனர். கோவி லில் இன்று இரவு சுவாமி- அம்பாள் வெள்ளி ரத வீதி உலா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் பால கிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Label