OUR CLIENTS
பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்: கடித்துக் குதறிய பெண் நடத்துனர்
பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்: கடித்துக் குதறிய பெண் நடத்துனர் Posted on 30-Sep-2016 பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள்: கடித்துக் குதறிய பெண் நடத்துனர்

பெங்களூரு:
பெங்களூருவில் பள்ளி மாணவர்களை பெண் நடத்துனர் ஒருவர் சரமாரியாக கடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரில் அரசுப்பேருந்து ஒன்று ஜலகல்லியிலிந்து கே.ஆர் புரத்திற்கு சகபயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது.

இதில் பேருந்து நிற்கும் ஒவ்வொரு பகுதிகளிலும் பயணிகள் ஏறவும், இறங்கவுமாக இருந்துள்ளனர். அப்போது பயணிகள் இறங்கும் போது படிக்கட்டில் பள்ளி மாணவர்கள் சிலர் இருந்துள்ளனர். அது பயணிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் பேருந்து புறப்படும் போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்துள்ளனர். இதனால் பேருந்தின் பெண் நடத்துனர், மாணவர்களை உள்ளே வரும்படி கூறியுள்ளார். ஆனால் மாணவர்களோ உள்ளே வருவதற்கு மறுத்துள்ளனர்.

நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. வார்த்தை போர் முற்றியதால் பேருந்து கங்கமன்னாகுடியில் நிறுத்தப்பட்டது.

Label