OUR CLIENTS
2016ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள்! முழு விபரம்
2016ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள்! முழு விபரம் Posted on 06-Oct-2016 2016ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள்! முழு விபரம்

சுவீடன்
உலகின் மிக உயர்ந்த பரிசான நோபல்பரிசு, ஆண்டுதோறும் அதற்கான அமைப்புகளான சுவீடனின் நோபல் கரோலின்ஸ்கா ஆய்வு மையமும், நார்வே அமைதி ஆய்வு மையமும் சேர்ந்து தகுதியாளர்களை தேர்வுசெய்து அறிவித்து வழங்குவது வழக்கம்.


2016 ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுபவர்களையும் இப்போது அறிவித்து வருகிறது. இன்று வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெறுபவரை அறிவித்துள்ளது.

வேதியியல்
வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மூன்றுபேருக்கு வழங்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜான்பெர்ரி, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரேசர், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் பிரிஞ் ஆகியோருக்கு மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்புக்காக பகிர்ந்து வழங்கப்படுகிறது.

மருத்துவத்துறை
கடந்த வாரம் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் நாட்டின் மருத்துவ விஞ்ஞானி யோஷிமோரி ஒசுமி தனி நபராக அறிவிக்கப்பட்டார்.

இயற்பியல்
நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்கள் அறிவிக்கப்பட்டனர். பிரிட்டனை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானிகளான டேவிட் தவுலஸ் (82), மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் (73), டங்கன் ஹால்டன் (65) ஆகிய மூன்று பேருக்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

தற்போது இவர்கள் மூவரும் அமெரிக்காவில் உள்ள வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் பணிசெய்து வருகின்றனர். அதிமின் கடத்திகள், அதிநீர்மங்களின் காந்தப்புல படிவங்கள், குறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

மேலும், எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டன் துகள்களை தாண்டி அணுவில் இருக்கும் அசாதாரண மூலங்கள் பற்றியும் இவர்கள் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகள் எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய வளர்ச்சிக்கு வித்திடும் எனவும் நம்பப்படுகிறது. மூவருக்கும் பரிசுத்தொகையான 6.5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் என தெரிகிறது.

Label