OUR CLIENTS
உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: தி.மு.க. வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: தி.மு.க. வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம் Posted on 06-Oct-2016 உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்: தி.மு.க. வழக்கை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி:
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படாததை எதிர்த்து தி.மு.க. வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


மேலும், புதிதாக தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தும்படி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தேர்தல் பணிகளை நிறுத்தும்படி அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்ளும் மாநில தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் எனக்கோரி தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தலை நடத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு விசாரணையை வருகிற 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Label