OUR CLIENTS
மத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன், நாராயணசாமி சந்திப்பு
மத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன், நாராயணசாமி சந்திப்பு Posted on 08-Oct-2016 மத்திய அமைச்சர் நிதின்கட்கரியுடன், நாராயணசாமி சந்திப்பு

புதுச்சேரி:
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அரசுமுறை பயணமாக டெல்லி சென்று இருந்தார். நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அவர் சந்தித்துப் பேசினார்.


நேற்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து பேசினார். அப்போது புதுவை துறைமுக ஒப்பந்தம் குறித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்துப் பேசினேன். அப்போது புதுவை துறைமுகத்தில் கண்டெய்னர் மூலம் சரக்கு களை கையாளுவது தொடர்பாகவும் சென்னை துறை முகத்துடன் ஒப்பந்தம் செய்வது குறித்தும் பேசினேன்.

இந்த ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகிவிடும். இதற்கான தேதி விரைவில் தெரியும்.

இந்த ஒப்பந்தத்தில் சென்னை துறைமுக தலைவரும், புதுவை தலைமை செயலாளரும் கையெழுத்திட உள்ளனர். புதுவை துறைமுகத்தை சென்னை துறைமுகத்தின் துணை துறைமுகமாக செயல்படவும் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும் துறைமுகம் அருகே சுற்றுலா வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ரூ.25 கோடி தருவதாகவும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார். இதற்கான கோப்புகளையும் உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். இவ்வாறு முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Label