OUR CLIENTS
அழகில்லாத ரஜினி சூப்பர்ஸ்டாரா? பாலிவுட் நடிகரின் சர்ச்சை பதிவு
அழகில்லாத ரஜினி சூப்பர்ஸ்டாரா? பாலிவுட் நடிகரின் சர்ச்சை பதிவு Posted on 10-Oct-2016 அழகில்லாத ரஜினி சூப்பர்ஸ்டாரா? பாலிவுட் நடிகரின் சர்ச்சை பதிவு

சென்னை:
சூப்பர் ஸ்டார் என்பவர் அழகானவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அழகில்லாத ரஜினி ச்சூபர் ஸ்டாராக ஆகியிருக்க கூடாது என்று பாலிவு நடிகர் கமால் ஆர் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பாலிவுட்டில் ஓரளவிற்கு தெரிந்த முகம் கமால் ஆர் கான். கே.ஆர்.கே என்று தன்னை அழைத்துக்கொள்ளும் இவர் தற்போது படங்கள் குறித்து விமர்சித்து வருகிறார். இவர் எப்போழுதுமே யாராவது ஒரு பிரபலத்தை வம்பு இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இவர் ரஜினி குறித்து ஒரு கருத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சூப்பர்ஸ்டார் என்பவர் நல்ல அழகும், உடல்வாகும் பெற்றிருக்க வேண்டும், மாறாக அழகில்லாத சிறிய உடல்வாகை பெற்றுள்ள ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக ஆகியிருக்க கூறாது என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Label