OUR CLIENTS
இந்த வாரம் இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
இந்த வாரம் இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் Posted on 10-Oct-2016 இந்த வாரம் இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

பெய்ஜிங்:
சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த வாரம் இந்தியா வருகிறார்.


வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதிவரை கோவாவில் பிரிக்ஸ் நாடுகளின் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார். பிரிக்ஸ் மாநாட்டில் ஜி ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

இந்தியா வருவதற்கு முன்னதாக, ஜி ஜின்பிங் கம்போடியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார். சீன அதிபர் ஒருவர் வங்காளதேசத்துக்கு செல்வது 30 ஆண்டுகளுக்குப் பிறகு இது முதல்முறையாகும்.

Label