OUR CLIENTS
பருப்பு விலை உயர்வு கட்டுப்படுத்த மத்திய அரசு புது முடிவு
பருப்பு விலை உயர்வு கட்டுப்படுத்த மத்திய அரசு புது முடிவு Posted on 12-Oct-2016 பருப்பு விலை உயர்வு கட்டுப்படுத்த மத்திய அரசு புது முடிவு

புது தில்லி:
பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விலையை கட்டுப்படுத்த பார்சல் செய்யப்பட்ட பொருட் கள் சட்டம், 2011ல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.


கடந்த ஜூன் மாதம் பருப்பு விலை ஒரு கிலோ ரூ. 200 வரை உயர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்தன. இந்த சந்தர்ப்பத்தை வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொண்டு பருப்பு வகைகளை பதுக்கும் செயலில் இறங்கினர். இதனால் மேலும் விலை உயர்ந்தது. எனவே, பருப்பு இறக்குமதியை மத்திய அரசு அதிகரித்தது. பயறு வகைகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையையும் உயர்த்தியது. இதன் காரணமாக பருப்பு வகைகளின் வினியோகம் சுமுகமானது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு புதிய முடிவை எடுத்துள்ளது.

இது குறித்து, மத்திய நுகர்வோர் துறை அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்போதுள்ள சட்ட நடைமுறைப்படி அத்தியாவசிய பொருட்களின் மொத்த விலையைத்தான் மத்திய அரசு கட்டுப்படுத்த முடியும். சில்லறை விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை. இதை சந்தை சக்திகளே நிர்ணயிக்கின்றன. அசாதாரணமான சூழ்நிலையில் அத்தியாவசியமான பொருட்களின் சில்லறை விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் பார்சல் செய்யப்பட்ட பொருட்கள் சட்டம், 2011ல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்களின் சில்லறை விலையை கட்டுப்படுத்த அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன் கீழ் எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களின் சில்லறை விற்பனை விலையையும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்தாலோ அல்லது அதற்கான அறிவிப்பை வெளியாட்டாலோ அந்த சட்டத்தின் கீழ் அது செல்லுபடியாகும். இந்த விதிமுறை சில்லறை வர்த்தகத்தில் பார்சல் வடிவிலோ, பர்சல் வடிவில் அல்லாமலோ விற்பனை செய்யும் பொருட்களுக்கும் பொருந்தும். எனினும், இது அசாதாரணமான சூழ்நிலைக்கு மட்டுமே பொருந்தும்.

Label