OUR CLIENTS
காட்பாடி தொகுதியை விட்டு செல்லமாட்டேன் என்று தேர்தலில் சூளுரைத்த துரைமுருகன் சென்னையில் தொடர்ந்து தஞ்சம்! : வாக்களித்த மக்கள் எம்எல்ஏவை பார்க்க முடியாமல் அவதி
காட்பாடி தொகுதியை விட்டு செல்லமாட்டேன் என்று தேர்தலில் சூளுரைத்த துரைமுருகன் சென்னையில் தொடர்ந்து தஞ்சம்! : வாக்களித்த மக்கள் எம்எல்ஏவை பார்க்க முடியாமல் அவதி Posted on 12-Oct-2016 காட்பாடி தொகுதியை விட்டு செல்லமாட்டேன் என்று தேர்தலில் சூளுரைத்த துரைமுருகன் சென்னையில் தொடர்ந்து தஞ்சம்!  : வாக்களித்த மக்கள் எம்எல்ஏவை பார்க்க முடியாமல் அவதி

வேலூர்:
நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் திமுக அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் அமோக வெற்றி பெற்றார். தேர்தலின் போது ஓட்டு வேட்டையாடிய துரைமுருகனை நேருக்கு நேர் சந்தித்து வசந்தபுரத்தில் ஒரு வாக்காளர் கேள்வி கேட்டார். அப்போது நீங்கள் வெற்றி பெற்றுவிட்டால் சென்னையில் தங்கி விடுகிறீர்கள். உங்களை பார்க்கவே முடிவதில்லை. நாங்கள் அவசரமாக உங்களை பார்க்க வேண்டும் என்றால் அது இயலாமல் போகிறது என்றார். இதற்கு பதிலளித்த துரைமுருகன், நான் திமுகவில் முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகிக்கிறேன்.


தமிழ்நாட்டுக்கே நான்தான் முதன்மைச் செயலாளர், ஆதலால்தான் சென்னையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இனி இந்த முறை சென்னைக்கு செல்வதை அதிகம் தவிர்த்துவிட்டு காட்பாடியில் தங்க முயற்சி செய்கிறேன் என்றார். இந்த வாக்குறுதி மீண்டும் காற்றிலே பறக்கிறது. காட்பாடி தொகுதி மக்கள் எம்எல்ஏவை பார்ப்பது என்றால் அரிதான விஷயமாகி விட்டது. அப்படியே அவர் காட்பாடியில் இருந்தாலும் அவரை ஈ மொய்ப்பது போல திமுக உடன்பிறப்புகள், நிர்வாகிகள் சூழ்ந்து கொள்கின்றனர். எது தொடர்பாகவும் தொகுதி மக்கள் துரைமுருகனை சந்தித்து எது தொடர்பான உதவியையும் பெற்றுவிட முடியாது. இந்த நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவது ஒருபுறம் இருந்தாலும் தொகுதி மக்களிடம் குறைகேட்பு கூட்டம் நடத்தவதே இல்லை. புகார் பெட்டியும் எங்கு வைப்பது இல்லை. எம்எல்ஏ அலுவலகம் இல்லை. அங்கும் அவர் வருவது இல்லை.

இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் அவரிடம் காணப்படுகிறது. ரேஷன், கல்வி, குடிநீர் உள்ளிட்ட பல தேவைகளுக்கு எம்எல்ஏவை நாடிச் செல்லும் தொகுதி மக்களுக்கு கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே தவிர வேறு எதுவும் கிடைப்பது இல்லை. இவர் காட்பாடிக்கு வந்துவிட்டால் போதும், ஒருபுறம் பகுதி செயலாளர் வன்னியராஜா, மறுபுறம் 1வது மண்டல தலைவர் சுனில்குமார், காட்பாடி ஒன்றிய செயலாளர் திருவலம் சரவணன் என்று ஒரு பட்டாளமே அவரை சூழ்ந்து கொள்ளும். பொதுமக்கள் துரைமுருகனை நெருங்கவே முடியாது. எந்த கோரிக்கையையும் நிறைவேற்றி கொள்ள முடியாது. இப்படியே தொடர்ந்து ஆண்டுகள் உருண்டோடுகின்றன. பல வளர்ச்சி பணிகளை செய்தால் மட்டும் போதாது, மக்களை எளிதில் சந்திப்பது, குறைகேட்பு கூட்டங்களை நடத்துவது, எம்எல்ஏ அலுவலகம் வந்து மக்களிடம் மனுக்களை பெறுவது என்று எந்த பணியையும் இவர் இதுவரை நடத்தியதே இல்லை. இதுதான் இவரது மைனஸ் பாயின்ட் ஆகும். கடந்த சட்டசபை தேர்தலில் இவரை எதிர்த்து அதிமுக சார்பில் டம்மி பீஸ் என்று அழைக்கப்படும் எஸ்ஆர்கே.அப்பு போட்டியிட்டதுதான் இவரது வெற்றிக்கு கூடுதல் வலுசேர்த்தது குறிப்பிடத்தக்கது. மக்களின் நாடித்துடிப்பு அறிந்து தேர்தலுக்கு தேர்தல் ஓட்டுக்களை வாங்கி குவித்து வெற்றியை சந்தித்து வரும் துரைமுருகனுக்கு தேர்தல் முடிந்து விட்டால் போதும் மக்களை சந்திப்பதை அறவே தவிர்த்து வருகிறார். தேர்தல் முடிந்து இதுநாள் வரை நன்றி கூற கூட துரைமுருகன் வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரையும் காட்பாடி தொகுதி மக்கள் ஆண்டாண்டு காலமாக எம்எல்ஏவாக தொடர்ந்து தேர்வு செய்து வருவது துரதிருஷ்டவசமானது என்பது குறிப்பிடத்தக்கது. மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது, அது அர்த்தமுள்ளது என்ற கண்ணதாசன் பாடல் வரிகள் துரைமுருகன் இல்லத்துக்கு செல்லும் சாமான்ய மனிதர்களுக்கு கிடைக்கிறது. ஒரு முறை சென்றால் போதும் இனி அவர்கள் வாழ்நாளில் துரைமுருகன் வீட்டு பக்கமே செல்ல மாட்டார்கள். இப்படி நடந்து கொள்ளும் துரைமுருகன் தான்தான் காட்பாடியில் பெரிய ஆள் என்று நினைத்து செயல்படுகிறார். தேர்தல் நேரத்தில் மட்டும் இதயம் துடிக்க பரபரக்க ஓட்டு வேட்டையாடுவார். இதை நினைவில் கொள்ள தொகுதி மக்கள் மறந்து விடக்கூடாது. தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்கிவிட்டு தேர்தல் முடிந்ததும் அனைவரையும் கழற்றி விடுவதில் துரைமுருகனை போல சாமர்த்தியசாலி யாரும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதியிலும் இருக்க முடியாது. இவர் தந்திரவாதி ஆவார். இப்படி இவரது நடவடிக்கைகளை தொகுதி மக்கள் புரிந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் நோக்கர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும்.

Label