OUR CLIENTS
6 ஆண்டுகளாக ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படாததன் பின்னணி என்ன?
6 ஆண்டுகளாக ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படாததன் பின்னணி என்ன? Posted on 12-Oct-2016 6 ஆண்டுகளாக ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படாததன் பின்னணி என்ன?

சென்னை:
நடிகர், நடிகைகள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பல்துறை கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதுகள் வழங்கும் ‘கலைமாமணி’ விருதுகள் கடந்த 6 ஆண்டுகளாக யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது. கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களை பேணி காக்கவும், பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலைபண்பாட்டு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கருணாநிதி, முரசொலி மாறன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட 1079 கலைஞர்களுக்கு இதுவரை கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர். கடைசியாக கடந்த 2010 மே மாதம் நடந்த விழாவில் அனுஷ்கா, தமண்னா, ஆர்யா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட 26 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது.


நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவித்து அவர்களுக்கான நலத்திட்டங்களை செய்து கொடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் கலை பண்பாட்டு துறை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தகுதியான நபர்களை அடையாளப்படுத்தி உறுப்பினர் அட்டைகளை வழங்குவதுதான் இந்த மையங்களின் பணி. இந்த மையங்களை ஒருங்கிணைக்க தமிழக அளவில் தஞ்சை, திருச்சி, சேலம், காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி என 6 மண்டல அலுவலகங்கள், துணை மற்றும் உதவி இயக்குநர்களின் பொறுப்பில் செயல்படுகின்றன. கிராமிய கலைஞர்களுக்காக மாவட்ட அளவில் கலைமணி, கலைசுடர்மணி, கலைவளர்மணி,  கலைநன்மணி, கலைமுதுமணி ஆகிய விருதுகள் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவில் வயதுவாரியாக கலைஞர்கள் தேர்வு செய்ய்பப்டு விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றால்தான் மாநில அளவிலான கலைமாமணி விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் மாவட்ட அளவில் வழங்கப்படும் விருதுகளையே பல ஆண்டுகளாக வழங்காமல் வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து தமிழக இயல் இசை நாடக மன்றத்தின் மாநில தலைவர் இசையமைப்பாளர் தேவா எந்த குரலும் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். இதற்கு காரணம் கலைமாமணி விருதுகளை தமிழக முதல்வர்தான் அறிவிக்க வேண்டும். அவரிடம் யார் போய் கேட்பது என்று மௌனமாக இருந்து வருகிறார் போலும். எது எப்படியோ பல கலைஞர்கள் விருது பெற தகுதி திறமை இருந்தும் விருது கிடைக்காமல் தவியாய் தவித்து வருகின்றனர்.இதற்கு நிரந்தர தீர்வு காண்பது எப்போது? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label