OUR CLIENTS
இரண்டு சீன விஞ்ஞானிகள் விண்வெளி பயணம்: 30 நாட்கள் தங்கி ஆய்வு நடத்துகிறார்கள்
இரண்டு சீன விஞ்ஞானிகள் விண்வெளி பயணம்: 30 நாட்கள் தங்கி ஆய்வு நடத்துகிறார்கள் Posted on 18-Oct-2016 இரண்டு  சீன விஞ்ஞானிகள் விண்வெளி பயணம்: 30 நாட்கள் தங்கி ஆய்வு நடத்துகிறார்கள்

பெய்ஜிங்:
சீன விஞ்ஞானிகள் 2 பேர் இன்று விண்வெளிப் பயணம் மேற்கொண்டனர். அவர்கள் விண்வெளியில் 30 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு நடத்துகிறார்கள்.


ஜிங் ஹைப்பெங் (வயது 50), சென் டோங் (37) ஆகிய இரு விஞ்ஞானிகளுடன், சீனாவின் லியுகுவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஷென்சோவ்-11 ராக்கெட் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றது.

விண்வெளி டியான்கோங்-2 ஆய்வு நிலையத்தை இந்த ராக்கெட் 2 நாட்கள் கழித்து சென்று சேரும். அதன்பிறகு, விஞ்ஞானிகள் 2 பேரும் 30 நாட்கள் விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்கிறார்கள்.

சீனா வருகிற 2022 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் டியான்கோங்-2 என்ற ஆய்வு நிலையத்தை முழுமையாக கட்டமைக்க திட்டமிட்டுள்ளது. கட்டுமானத்தில் இருக்கும் அந்த ஆய்வு நிலையத்தில் பணிகள் மேற்கொள்ளவே இப்போது விஞ்ஞானிகளை அனுப்பி உள்ளது.

இப்போதைய நிலைமையில் சர்வதேச விண்வெளி நிலையம் என்ற ஒரேஒரு விண்வெளி நிலையமே பயன்பாட்டில் இருக்கிறது. அதுவும் 2024 ஆம் ஆண்டுக்குப்பிறகு கைவிடப்படும். அதன்பிறகு, அப்போது சீனா அமைக்கும் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும்.

Label