OUR CLIENTS
420 என்ற எண்ணிற்கு பின்னால் இத்தனை மர்மங்களா?
420 என்ற எண்ணிற்கு பின்னால் இத்தனை மர்மங்களா? Posted on 20-Oct-2016 420 என்ற எண்ணிற்கு பின்னால் இத்தனை மர்மங்களா?

உத்திரகாண்ட்:
பெரும்பாலான நாடுகளில் 420 என்ற எண் கொண்ட ஹொட்டல் அறையே கிடையாது. இதன் பின்னால் பொதிந்திருக்கும் மர்மங்களுக்கு சில லாஜிக்கான காரணங்களும் ஒளிந்திருக்கின்றன.


இந்தியா முழுக்க எங்கு சுற்றினாலும் சிறிய உணவு விடுதிகள் முதல் ஐந்து நட்சத்திர விடுதிகள் வரையில் எங்குமே 420 என்ற எண் கொண்ட அறையைக் கண்டுபிடிக்க முடியாது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, 420 என்பது நேர்மையற்றவர், மோசடி செய்பவர்களை தண்டிப்பதற்கான பிரிவாகும்.

அதனாலேயே எந்த ஹோட்டல் அறையிலும் 420 என்னும் எண் இல்லை. அப்படி இருந்தால் அந்த அறையில் யாரும் தங்குவதற்குவதற்கு விரும்ப மாட்டர்கள் என்ற காரணத்தால் 419 க்கு அடுத்து 421 என்ற எண் தான் எல்லா ஹோட்டல்ளிலும் இருக்கிறது.

ஏப்ரல் 20 ஆம் தேதி உலக புகைப்பிடிப்போர் மற்றும் போதைப்பொருள் (international weed day) நாளாகக் கொண்டாடப்படுகிறது.

முதலில் அமெரிக்காவில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து பொதுமக்கள் போராடத் தொடங்கினர். அந்த போராட்டம் வலுவடையத் தொடங்கி, போராளிகள் வெற்றியும் பெற்றனர்.

அதற்குக் காரணம் அவர்களுடைய போராட்ட யுக்தி தான். தொடர்ந்து 420 மணி நேரம் புகைப்பிடித்து போராட்டம் செய்தனர். வருடத்தின் 4 -ஆம் மாதம் 20 -ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து 420 மணி நேரம் நடந்தது. இதனாலும்கூட இதுபோன்ற சம்பவங்களை செய்பவர்களை 420 என்று அழைப்பதுண்டு. 420 என்றால் ‘நாட் பர்ஃபெக்ட்‘ என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவிலும் 420 என்பது நல்ல எண்ணாகக் கருதப்படுவதில்லை. மக்கள் மனதில் அந்த நம்பரைப் பற்றிய எண்ணம் வேறாக இருப்பதாலும் அந்த எண்ணை நிறைய இடங்களில் பயன்படுத்துவதில்லை.

இந்தியர்கள் 420 என்றால் நம்பிக்கையற்றவர்கள், விசுவாசம் இல்லாதவர்கள் என்ற எண்ணம் கொண்டிருக்கின்றனர்.

உத்திரகாண்ட் தலைமைச் செயலகத்தில் 420 என்ற எண் கொண்ட அறை இல்லை. ஆனால் அங்கு 419 -ஆம் எண் கொண்ட அறையும் 421 எண் கொண்ட அறையும் இருக்கின்றன.

420 எண் கொண்ட அறை இருந்தது. ஆனால் எந்த அதிகாரியும் அந்த அறையைப் பயன்படுத்த விரும்புவதில்லை என்பதால் அந்த நெம்பர் போர்டு கழட்டப்பட்டு, அந்த அறையும் மூடப்பட்டுவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு சில ஹோட்டல்களில் 420 எண் கொண்ட அறை இருந்தது. அதில் யாரும் தங்க மறுத்தனர்.

குறிப்பாக தம்பதிகள் அந்த அறையில் தங்குவதில்லை. அதனாலேயே அந்த எண் இந்திய ஹோட்டல் அறைகளில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.

Label