OUR CLIENTS
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற இளைஞர்கள் வரவேற்ப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற இளைஞர்கள் வரவேற்ப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல். Posted on 21-Oct-2016 தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற இளைஞர்கள் வரவேற்ப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல்.

விழுப்புரம்:
படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்குடன் "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்" (NEEDS) என்ற திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்துள்ள தொழில் முனைவோர்கள் சுயமாக தொழில் துவங்கிடும்பொருட்டு, புதிய தொழில்கள் துவங்கிட வங்கிக்கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு ரூ.5 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான திட்டமதிப்பீடுள்ள உற்பத்தி/சேவை தொடர்பான தொழில்கள் துவங்கிட 25 சதவிகிதம் தமிழக அரசு மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2016-17 ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதிகள்:
          இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் ஆண் மற்றும் பெண் தொழில் ஆர்வலர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை (டீஊ பிரிவு ஆண்களுக்கு 35 வயது வரை) உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த பட்சம் 3 வருடங்களுக்கு குறையாமல் தமிழ்நாட்டில் குடியிருப்போராக இருக்க வேண்டும். பட்டபடிப்பு, அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்கல்வி, முடித்தவராக வேண்டும்.  இத்தகுதிகளுடன் விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருத்தல் அவசியம். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தமிழக அரசு மானியமானது முன்னிணைப்பாக முதலீட்டாளருடைய பங்குமூலதனமாக பயன்படுத்தப்படும் விதத்தில் வழங்கப்படுகிறது. மேலும், தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் பயனாளிகளுக்கு 3ரூ வட்டி மானியம், சிட்கோ தொழிற்பேட்டையில் இட ஒதுக்கீடுக்கான முன்னுரிமை கட்டாயமாக்கப்பட்ட ஒரு மாத கால மேலாண்மை பயிற்சி, 50ரூ மகளிருக்கான ஒதுக்கீடு, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேரடி கண்காணிப்பில் ஒருமுனை தீர்வுக்குழு கூட்டத்தில் வைத்து உரிமங்கள் ஒப்புதல்கள் பெற்றுத் தருதல் ஆகிய தமிழக அரசின் சிறப்பம்சங்கள் இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.

        எனவே, படித்த தகுதியுள்ள தொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை நிறுவும் விதத்தில் உடனடியாக உரிய கல்வித்தகுதி சான்று மற்றும் திட்ட விவரங்களுடன் www.msmeonline.tn.gov.in/needs <http://www.msmeonline.tn.gov.in/needs> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து நகல் விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்பிரமணியன்  கேட்டுக்கொண்டுள்ளார்.

Label