OUR CLIENTS
விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!
விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு!! Posted on 21-Oct-2016 விவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயப்பணிகள் குறித்து செய்தியாளர் பயணம் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மடவாளம் ஊராட்சி காளத்தியூர் கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் 2016-17ல் 1.5 ஹெக்டர் பரப்பளவில் மாதேஸ்வரன் என்பவரின் விவசாய நிலத்தில் பருத்தி உற்பத்தி நடவு முறையில் ஊடுபயிராக துவரை செடிகளை பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் பார்வையிட்டு விவசாயியிடம் துவரை ஊடுபயிர் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றது என்பதை கேட்டறிந்து, இதற்கு அரசு மான்யம் கிடைக்கப்பெற்றதா என்பதை கேட்டறிந்தார். பின்னர் காவாப்பட்டரை கிராமத்தில் வடிவேல் என்பவரின் விவசாய மாந்தோப்பு மற்றும் தென்னந்தோப்புகளில் விதைப்பு முறையில் ஊடுபயிராக துவரை செடிகள் பயிரிட்டுள்ளதை பார்வையிட்டு துவரை சாகுபடி குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் குரிசிலாப்பட்டு ஊராட்சி முத்தம்பட்டு பள்ளவள்ளி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் தண்டபாணி என்பவர் பசுமைக்குடில் மூலம் 50 சதவீத அரசு மான்யத்துடன் ரூ.17.80 இலட்சம் செலவில் 2000 சதுரமீட்டர் அளவில் சாமந்தி மலாரினை உற்பத்தி செய்யும் பசுமைக்குடிலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு விவசாயியிடம் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கின்றதா எனவும், அரசு மான்யம் எவ்வளவு கிடைக்கப்பெற்றது எனவும் கேட்டதற்கு மான்யமாக ரூ.8.90 இலட்சம் தோட்டக்கலைத் துறையின் மூலம் வழங்கப்பட்டது எனவும், பசுமைக் குடிலில் இஸ்ரேல் தேசத்து சாமந்தி பூக்கள் பயிரிடப்பட்டு மூன்று மாத கால அளவில் 150 கிலோ சாமந்தி மலாரினை அறுவடை செய்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விவசாயி தொரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தொரிவித்ததாவது: இவ்வாண்டு உலக பயறு ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்டதால், நமது வேலூர் மாவட்டத்தில் பயறு சாகுபடி அதிகாரித்திட பலவகையான திட்டங்கள் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இவ்வாண்டு துவரை பயிர் சாகுபடி பரப்பினை அதிகாரிப்பதற்கும், அதன் உற்பத்தியினை பெருக்குவதற்கும், நடவு துவரை சாகுபடி (Transplanted Redgram) முறையினை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.2500/- பின்கொணர் மான்யமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்தொழில்நுட்பமானது பயறு உற்பத்தி திறனை அதிகாரிக்கும் ஒரு புதிய தொழில்நுட்பமாக கண்டறியப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் துவரை சாகுபடி இலக்கு 15 ஆயிரம் ஹெக்டர்  ஆக நிர்ணயிக்கப்பட்டு சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் துவரை சாகுபடியை பருத்தி, கடலை போன்ற பயிர்களில் ஊடுபயிராக செய்து வருகின்றனர். மேலும் காலியாக உள்ள தென்னங்தோப்பு, மாந்தோப்பு ஆகிய நிலங்களில் விவசாயிகள் துவரையை சாகுபடி செய்ய வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தொரியப்படுத்தி வருகிறோம். நடவு முறை மூலம் துவரையை சாகுபடி செய்வதால் விவசாயிகளுக்கு ஒன்றரை முதல் இரண்டு மடங்குகள் வரை உற்பத்தி அதிகாரிக்கும். இந்த வரிசை நடவு முறையில் விதைகள் ஒரு ஹெக்டருக்கு 2 கிலோ மட்டுமே தேவைப்படும். ஆனால் தூவும் நடவு முறையில் சுமார் 6 கிலோ வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. இவை விவசாயிகளின் செலவீனத்தை குறைக்க உதவிடும். துவரை வரிசை நடவு முறையை விவசாயிகள் மேற்கொள்ள அரசு ஒரு ஹெக்டருக்கு ரூ.2500/- மான்யமாக வழங்குகிறது. தூவும் நடவு முறைக்கு ரூ.1000/- மான்யமாக வழங்கி வருகிறது. மேலும், துவரைப்பயிரினை வரிசை நடவாக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு எக்டருக்கு ரூ.1000/- பின்கொணர் மான்யமாகவும் வழங்கப்படுகிறது. துவரை பயிரினை இவ்விரண்டு முறைகளில் பருத்தியில் ஊடுபயிராக பயிரிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், துவரை பரப்பினை பெருக்கிட தென்னந்தோப்பு மற்றும் மாந்தோப்புகளில் ஊடு பயிராக துவரை பயிர் சாகுபடி செய்ய வேளாண் மூலம் ஊக்குவிக்கப்படுகிறது.

தோட்டக்கலைத் துறையின் மூலம் 2015-2016 தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட சூழலில் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்வதற்காக தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் பசுமைக்குடில் அமைக்கப்பட்டு வருகிறது. 2015-16 ஆம் ஆண்டில், இத்திட்டத்தில் 10,000 சதுரமீட்டர் அளவிற்கு பசுமைக்குடில் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறையில் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50 சதவீத மான்யம் வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் 4 விவசாயிகள் பசுமைக் குடில் மூலம் செடிகளை வளர்த்து பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு வேலூர் மாவட்டத்தில் தற்போது அதிக தேவையாக துவரை சாகுபடியும் தனிநபர் விவசாயியின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பசுமைக்குடில் பயிர் உற்பத்தியும் செய்து பயனடைந்து வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் செய்தியாளர் பயணத்தின் போது செய்தியாளர்களிடம் தொரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் வேளாண் துறை ராமகிருஷ்ணன், துணை இயக்குநர் பொன்னு, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.இளங்கோ, உதவி இயக்குநர்கள் வேளாண்மை சத்தியமூர்த்தி, பிரதீப் குமார், வேளாண் அலுவலர்கள் திலகவதி, சுரேஷ், மற்றும் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Label