OUR CLIENTS
காசு பணம் துட்டு மணி மணி: திமுகவை கிண்டலடிக்கும் அழகிரியின் மகன்!
காசு பணம் துட்டு மணி மணி: திமுகவை கிண்டலடிக்கும் அழகிரியின் மகன்! Posted on 22-Oct-2016 காசு பணம் துட்டு மணி மணி: திமுகவை கிண்டலடிக்கும் அழகிரியின் மகன்!

சென்னை:
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம். இதில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் திமுக தனது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.


அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமியும் தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதியும் போட்டியிடுகின்றனர். திருப்பரங்குன்றம் இடைதேர்தலில் டாக்டர் சரவணனை களம் இறக்கியுள்ளது திமுக.
 
திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திமுக நிறுத்தியுள்ளதை மு.க.அழகிரியின் மகன் தயாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலடித்து விமர்சித்துள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிட சரவணனைவிட நல்ல வேட்பாளர் மதுரை திமுகவில் இல்லை என்பதை நினைக்கும்போது, கவலையாக உள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய அவர் கடைசியில் காசு பணம் துட்டு மணி மணி என குறிப்பிட்டு கிண்டலடித்துள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி விகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில் மு.க.ஸ்டாலின் தான் தனது அரசியல் வாரிசு எனவும் மு.க.அழகிரி பற்றி கேட்ட கேள்விக்கு கழகத்தில் இல்லாதவர்களை பற்றி பேச வேண்டாம் என கூறியது அழகிரி தரப்புக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த பேட்டி நேற்று வைரலாக பரவியது. அதற்கான எதிர்வினை தான் இந்த டுவிட்டர் பதிவோ?.

Label