OUR CLIENTS
‘காங்., திமுகவின் காவிரி துரோகம் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தேவை’: பொன் ராதாகிருஷ்ணன்
‘காங்., திமுகவின் காவிரி துரோகம் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தேவை’: பொன் ராதாகிருஷ்ணன் Posted on 22-Oct-2016 ‘காங்., திமுகவின் காவிரி துரோகம் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை தேவை’: பொன் ராதாகிருஷ்ணன்

சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ், திமுக ஆட்சி காலத்தில் காவிரி பிரச்னையில் நடந்த துரோகம் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.  
 

தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று காலை 10 மணிக்கு வந்தார். விமானநிலையத்தில் அவர் அளித்த பேட்டி:  

தமிழகத்தில் காங்கிரஸ், திமுக ஆட்சி காலங்களில் காவிரி பிரச்னையில் மிகப்பெரிய துரோகம் செய்துள்ளன. இதை தமிழக மக்களுக்கு தமிழக அரசு தெளிவாக விளக்கி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள இந்து அமைப்பு தலைவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். பாஜ அலுவலகங்களுக்கு அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இதனால் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் முறையிட்டுள்ளேன்.  

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கும் ஒரு சில மாநில அரசுகளுக்கும்  இடையே கருத்து வேறுபாடு உள்ளது. மாநில அரசுகளின் கோரிக்கைகளை தீர்க்க முடியாதவை அல்ல. மாநில அரசுகளுடன் சுமுகமாக பேசி தீர்த்து கொள்ள மத்திய அரசு முன்வரும். சுமுகமான முறையில், திட்டமிட்டபடி ஜிஎஸ்டி அமலாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Label