OUR CLIENTS
வடகொரியா முசுடன் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி
வடகொரியா முசுடன் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி Posted on 22-Oct-2016 வடகொரியா முசுடன் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி

சியோல்:
வடகொரியாவின் கண்டம்விட்டு கண்டம் பாயும் முசுடன் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வியடைந்துள்ளது. வடகொரியா உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வருகிறது. வடகொரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று தாக்கும் வலிமையுடைய ‘முசுடன்’ ஏவுகணை சோதனையை நடத்தியது. ஆனால் அந்த சோதனை வெற்றியடையாமல் தோல்வியில் முடிந்தது.


வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் வடகொரியா நேற்று மீண்டும் ‘முசுடன்’ ஏவுகணை சோதனையை நடத்தியது. இம்முறை நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை முயற்சியும் தோல்வியே.

ஏவுகணை சோதனை பற்றி தென்கொரிய நாட்டின் கூட்டுப்படைகளின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு பியாங்யாங் மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு முசுடன் ஏவுகணை சோதனை நடைபெற்றதாகவும், அந்த ஏவுகணை, தரையில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சில நொடிகளிலேயே வெடித்துச் சிதறியதாக கூறப்பட்டுள்ளது.

வடகொரியா இந்த ஆண்டில் 8 முறைகள் முசுடன் ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. அவற்றில் ஒன்று மட்டுமே வெற்றி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Label