OUR CLIENTS
ஒடிஷா- ஆந்திரா எல்லையில் அதிரடி தேடுதல் வேட்டை: 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!!
ஒடிஷா- ஆந்திரா எல்லையில் அதிரடி தேடுதல் வேட்டை: 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!! Posted on 24-Oct-2016 ஒடிஷா- ஆந்திரா எல்லையில் அதிரடி தேடுதல் வேட்டை: 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை!!

மல்காங்கிரி:
ஒடிஷா- ஆந்திரா எல்லையான மல்காங்கிரி வனப்பகுதியில் பதுங்கியிருந்த 18 மாவோயிஸ்டுகள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


ஒடிஷா- ஆந்திரா மாநில எல்லையையொட்டி வனப்பகுதி மல்காங்கிரி மாவட்டம். மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இப்பகுதி இருந்து வருகிறது.

ஒடிஷா, ஆந்திரா போலீசார் இணைந்து இன்று அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையின் போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.

இதில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 4 ஏகே 47 ரக துப்பாக்கிகள், 2 ரைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 2 போலீசார் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக ஆந்திர பிரதேச காவல்துறை அதிகாரி ராகுல் தேவ் சர்மா கூறுகையில், மல்காங்கிரி எல்லையில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த என்கவுண்ட்டரில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

இதேபோல கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் நடவடிக்கையில் 13 மாவோயிஸ்டுகளின் தளபதிகள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Label