OUR CLIENTS
இந்தியா என்.எஸ்.ஜி உறுப்பினராவது எளிதில் எட்டக் கூடிய விஷயம் அல்ல: சீனா
இந்தியா என்.எஸ்.ஜி உறுப்பினராவது எளிதில் எட்டக் கூடிய விஷயம் அல்ல: சீனா Posted on 18-Jul-2016 இந்தியா என்.எஸ்.ஜி உறுப்பினராவது எளிதில் எட்டக் கூடிய விஷயம் அல்ல: சீனா

பீஜிங்:
அணுசக்தி வணிகத்தில் ஈடுபடவும், அணு தொழில்நுட்ப ஏற்றுமதி செய்யவும் என்.எஸ்.ஜி. என்னும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுவில் இந்தியா உறுப்பினர் ஆக வேண்டும். ஆனால் இதில் உறுப்பினராக சேருவதற்கு என்.பி.டி. என்னும் அணுஆயுத பரவல் தடை உடன்பாட்டில் கையெழுத்திட வேண்டும். இந்தியா இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடு என்பதால், என்.எஸ்.ஜி.யில் சேர்ப்பதற்கு சீனா முட்டுக்கட்டை போட்டது.


அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்தாலும், என்.எஸ்.ஜி. அமைப்பில் உள்ள 48 நாடுகளும் ஏகோபித்த ஆதரவை வழங்கினால் மட்டுமே, உறுப்பினர் ஆக முடியும். சியோலில் கடந்த மாதம் நடந்த என்.எஸ்.ஜி. பேரவை கூட்டத்தில், இதே நிலைப்பாட்டை சீனாவும், சில நாடுகளும் வலியுறுத்தியதால் இந்தியாவின் விருப்பம் நிறைவேறாமல் கை நழுவியது.

இதனால், இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், என்.எஸ்.ஜி., எனப்படும் அணுசக்தி வினியோக நாடுகள் குழுமத்தில் இந்தியா இடம்பிடிப்பது எளிதில் நடக்கக் கூடிய விஷயம் அல்ல என்று சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியாவிற்கான சீன தூதர் லியு ஜிங்சாங் கூறியதாவது:

என்.எஸ்.ஜி உறுப்பினராகும் விவகாரத்தில் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே வேறுபாடு இருப்பதாக நிலவி வரும் வதந்திகளை நீக்க வேண்டும். இது சாதாரண விவகாரம் அல்ல. அதிக அளவில் விவாதங்கள் தேவைப்படுகின்றன.

இந்தியா என்.எஸ்.ஜி உறுப்பினராவது எளிதில் நடக்கக் கூடிய விஷயம் அல்ல. இது புதிய உறுப்பினர்கள் என்.எஸ்.ஜி-யில் சேருவது தொடர்பான விவகாரம். அது முறைப்படி செயல்முறைகள் பின்பற்றப்படும். எந்த நாட்டையும் உறுப்பினர் ஆவதை இந்தியா எதிர்க்கவில்லை.

Label