OUR CLIENTS
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் Posted on 27-Oct-2016 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்   திட்டம்

தருமபுரி:
தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை அவர்களின் சொந்த ஊரிலேயே  குறு,சிறு உற்பத்தி மற்றும்  சேவை நிறுவனங்கள் துவக்க வழியேற்படுத்தி கொடுப்பது. வேலைவாய்ப்பிற்காக இடம் பெயர்தலை தவிர்ப்பது மற்றும் வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வாய்ப்பு ஏற்படுத்தி தருவது ஆகியவற்றை நோக்கமாக கொண்ட ஒரு சிறப்பான திட்டமாகும்.


திட்டத்தின் தன்மை மற்றும் நிதி உதவி விவரம்:
நகர மற்றும் ஊரகப் பகுதிகள் ஆகிய மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.  உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.5 இலட்சம் வரையிலும், சேவை தொழில்களுக்கு அதிகபட்சமும் ரூ.3 இலட்சமும், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.1 இலட்சமும் இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கடனாக வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீத மானியமாக வழங்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயத்துடன் நேரடியான தொடா;புடைய இனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது.

தகுதியுடைமை:
·18 வயது நிரம்பியவா;கள் பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35, சிறப்பு பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 45 வயதும்.

·கல்வி தகுதி-குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

·குடும்ப வருமானம் - வருடத்திற்கு 1,50,000/-க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

·விண்ணப்பதாரரோ, அவர்களின் குடும்பத்தினரோ எந்த ஒரு வங்கியிலும் தவணை தவறிய கடன்தாரராக இருப்பின் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியற்றவர்.  மேலும், ஏற்கனவே வேறு எந்த துறை மூலமாகவும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தில் பயன் பெற்ற வரும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியற்றவர்

தொழில் முனைவோரின் பங்களிப்பாக திட்ட முதலீட்டில் 10 சதவீதம் தொகையினை பொதுப் பிரிவினரும், 5 சதவீதம் தொகையினை ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின் தங்கிய வகுப்பினர், மிகவும் பின் தங்கிய வகுப்பினர் / சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் , திருநங்கைகள் ஆகியோர் வங்கியில் செலுத்த வேண்டும்.

தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர், பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, சேலம் மெயின் ரோடு, தருமபுரி - 636 705 அவர்களைஅணுகவும்  தொலைபேசிஎண். 04342 231081 230892

Label