OUR CLIENTS
இந்தியாவில் உள்ள 4 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு
இந்தியாவில் உள்ள 4 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு Posted on 01-Nov-2016 இந்தியாவில் உள்ள 4 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு

இஸ்லமாபாத்
புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நான்கு பேரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெக்மூத் அக்தரை இந்தியா நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் 4 பேரை தாய்நாட்டுக்கு திரும்ப அழைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் பருக் ஹபீப், காதிம் ஹூசைன், முதாசிர் சீமா, ஷாகித் இக்பால் ஆகிய 4 பேர் திரும்ப அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று டான் பத்திரிகை கூறியுள்ளது.

Label