OUR CLIENTS
‘4 மாதங்களில் தமிழக அரசியல் புதுவாழ்வு எடுக்கும்’ திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கருத்து!
‘4 மாதங்களில் தமிழக அரசியல் புதுவாழ்வு எடுக்கும்’ திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கருத்து! Posted on 01-Nov-2016 ‘4 மாதங்களில் தமிழக அரசியல் புதுவாழ்வு எடுக்கும்’ திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கருத்து!

கரூர்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 30ம் தேதி நடந்தது. இதில் திமுக முதன்மைச் செயலாளரும், காட்பாடி தொகுதி எம்எல்ஏவுமான துரைமுருகன் பேசியதாவது: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணம் பிடிபட்டதாக கூறி, தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது. 234 தொகுதிகளிலும் பண விநியோகம் இருந்தது. இதனை கண்டுபிடிக்க முடியாத தேர்தல் ஆணையத்துக்கு அபராதம் விதித்திருக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவை தேர்தல் ஆணையம்தான் ஏற்க வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தவறான போக்கினால்தான் இந்த தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் வந்துள்ளது.


இந்த தேர்தலிலாவது பண நடமாட்டம் இல்லாமல் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ள வேண்டும். யார் ஒருவர் தனது தொகுதியை தெய்வமாக நினைக்கிறாரோ அவரே வெற்றி பெறுவார். சூதாட்ட களமாக பயன்படுத்துபவர் அழிந்துவிடுவார். கே.சி.பழனிசாமி தனது தொகுதியை தெய்வமாக நினைப்பதையும் தாண்டித்தனது சொந்தச் செலவில் கோயிலே கட்டிக் கொடுக்கிறார். அதனால் அவர் வெற்றி பெறுவது உறுதி. முதல்வர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசாங்கம் நடக்காமல் இருக்க கூடாது. இன்னும் 4 மாதங்களில் தமிழக அரசியல் புதுவாழ்வு எடுக்கும். அப்போது கே.சி.பழனிசாமி அமைச்சராக இருப்பார் என்றார். இவரது பேச்சு திமுகவை சேர்ந்த உடன்பிறப்புகளுக்கு புத்துணர்ச்சி அளித்ததுபோல இருந்தது குறிப்பிடத்தக்கது.

Label