OUR CLIENTS
MH 370 கடலில் விழுவதற்கு முன் என்ன நடந்தது? வெளியான திடுக்கிடும் தகவல்கள்
MH 370 கடலில் விழுவதற்கு முன் என்ன நடந்தது? வெளியான திடுக்கிடும் தகவல்கள் Posted on 02-Nov-2016 MH 370 கடலில் விழுவதற்கு முன் என்ன நடந்தது? வெளியான திடுக்கிடும் தகவல்கள்

ஆஸ்திரேலியா
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தனது கட்டுப்பாடு முழுவதையும் இழந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என புதிய தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


கடந்த 2014 மார்ச் 8ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங் நோக்கி 239 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்ற மலேசிய விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.ஹெச்.370 விமானம் திடீரென மாயமானது.

காணாமல் போன அந்த விமானத்தை தேடும் பணியை ஆஸ்திரேலியா, மலேசியா, சீனா போன்ற நாடுகள் செய்து வந்தன. முக்கியமாக இந்திய பெருங்கடலை சுற்றியே முக்கிய தேடுதல் வேட்டைகள் நடந்து வந்தன.

இப்போது இது பற்றிய புதிய தகவலை Australian Transport Safety Bureau வெளியிட்டுள்ளது. அதன் தலைவர் Peter Foley கூறுகையில், காணாமல் போன விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளன மற்றும் அது அந்த விமானத்தின் பாகம் தான் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த விமானமானது தண்ணீரில் மூழ்கும் முன்னர் தனது கட்டுப்பாடு முழுவதையும் இழந்து தான் தண்ணீரில் முழ்கியிருக்கும் என தாங்கள் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது வரும் மாதங்களில் வானிலை மோசமாக இருக்கும் காரணத்தினால் விமானத்தை தேடும் வேட்டையில் நிச்சயம் தடங்கல் உருவாகும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Label