OUR CLIENTS
நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கிய கும்பல்! பகீர் காரணம்
நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கிய கும்பல்! பகீர் காரணம் Posted on 03-Nov-2016 நடுரோட்டில் பெண்ணை கொடூரமாக தாக்கிய கும்பல்! பகீர் காரணம்

பீகார்
தன் கணவரை கொலை செய்தார் என கூறி 45 வயது பெண்ணை உருட்டுகட்டையால் பல ஆண்கள் சேர்ந்து அடித்த சம்பவம் வீடியோ காட்சியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தில் உள்ள சமஷ்டிபூர் என்னும் இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் உஷா தேவி (45) என்னும் பெண்ணை அவர் வீட்டிலிருந்து ஒரு கும்பல் வெளியில் பிடித்து தள்ளுகிறது.

பின்னர் அந்த கும்பலில் இருக்கும் ஆண்கள் கையில் ஆளுக்கு ஒரு உருட்டு கட்டையை எடுத்து அந்த பெண்ணை சரமாரியாக தாக்குகின்றனர்.

வலி தாங்க முடியாமல் துடிக்கும் அந்த பெண் பின்னர் மயக்க நிலையை அடைவது போல அந்த வீடியோவில் உள்ளது.

இந்த சம்பவத்தை பற்றி விசாரித்த உயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், உஷா தன் கணவர் அசோக் பவனுடன்(50) வாழ்ந்து வந்தார்.

இருவர்களுக்குள் சமீபத்தில் ஏற்பட்ட சண்டையில் உஷா தனது கணவர் அசோக்கை இரும்பு கம்பியால் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

நாங்கள் அசோக்கின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்த சமயத்தில், இந்த ஊர் மக்கள் கணவனை கொன்றதை காரணம் காட்டி உஷாவை அடித்துள்ளனர். தற்போது அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.

அவர் குணவடைந்தவுடன் அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Label