OUR CLIENTS
பிரான்சில் குழந்தைகளை அடிக்க பெற்றோருக்கு தடை!
பிரான்சில் குழந்தைகளை அடிக்க பெற்றோருக்கு தடை! Posted on 06-Jul-2016 பிரான்சில் குழந்தைகளை அடிக்க பெற்றோருக்கு தடை!

பிரான்சில் குழந்தைகளை அடிக்க பெற்றோருக்கு தடை விதித்து புதிய சட்டம் ஒன்றை நடைமுறைபடுத்த திட்டமிட்டிருப்பதாக குடும்ப நல அமைச்சர் Laurence Rossignal தெரிவித்துள்ளார். மேலும், சட்டத்தை மீறும் பெற்றோருக்கு கடுமையாக தண்டனை விதிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் குழந்தைகள் துன்புறுத்தல் தொடர்பான கடுமையான சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் தெரிவத்துள்ளார்.  புதிய சட்டத்தின் படி, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடித்தாலோ, உடல்ரீதியாக அல்லது மன ரீதியாகவோ தாக்கினால் கடுமையான சட்டம் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான புதிய சட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக Laurence Rossignal தெரிவித்துள்ளார்.

பிரான்சில் பள்ளிகளில் வேறு பொது இடங்களில் குழந்தைகளை அடிப்பது தண்டனைக்குரிய குற்றம் என சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டிற்குள் பெற்றோர்கள் கண்டிப்பு தன்மை குறித்த எந்த சட்டங்களையும் இதுவரை அரசு இயற்றவில்லை.  

இந்நிலையில் மிக விரைவில் நாடு முழுவதும் குழந்தைகளை அடிப்பதற்கு பெற்றோர்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும் என குடும்ப நல அமைச்சர் Laurence Rossignal தெரிவித்துள்ளார்.

Label