OUR CLIENTS
கூட்டணிக்காக தேடி வந்த வைகோ எங்களை விமர்சனம் செய்வதா? பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
கூட்டணிக்காக தேடி வந்த வைகோ எங்களை விமர்சனம் செய்வதா? பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் Posted on 07-Nov-2016 கூட்டணிக்காக தேடி வந்த வைகோ எங்களை விமர்சனம் செய்வதா? பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

சென்னை
கூட்டணிக்காக தேடி வந்துவிட்டு எங்களை விமர்சனம் செய்வதா? என வைகோவிற்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்தார்.

தே.மு.தி.க. மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் 3 சட்டசபை தொகுதிகளில் வருகிற 17–ந் தேதி வரை பிரசாரம் செய்ய இருக்கிறேன். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான தேதி அறிவிக்கப்படும்.

திருப்பரங்குன்றத்தில் மட்டும் இடைத்தேர்தல் நடக்கிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு மறுதேர்தல் நடக்க உள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் அதிக அளவில் பணப்பட்டுவாடா நடந்ததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் நியாயமாக நடக்க தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் நியாயமாக நடந்தால் தே.மு.தி.க.விற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வைகோ தினமும் ஒரு கருத்தை கூறுவார். தினமும் உணர்ச்சி வசப்பட கூடியவர். அவர் சொல்லும் கருத்துகளுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தே.மு.தி.க.வுடன் கூட்டணி வேண்டும் என்று அவர்தான் தேடி வந்தார். இப்போது விமர்சனம் செய்கிறார். இதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும். 3 தொகுதிகளில் தே.மு.தி.க. ஜெயித்தால் அந்தந்த தொகுதிகளில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்போம் என பிரசாரம் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Label